தமிழர்களின் செல்வம் பெரும்பாலும் ஆடு மாடுகளாகவே ஆதியில் இருந்து சில காலம் முன்பு வரை இருந்தது வந்தது.
அதுவும் பெரும் தொகையில் ஆடுகள் வளர்க்கப்பட்டது. இந்த ஆடுகள் எதற்காக பாலுக்காக வளர்க்கப்பட்டதா?
பாண்டியர்களின் சின்னம் மீன். இந்த மீனவர் இனம் தான் தமிழ்நாட்டில் பெருத்த இனம்.
இந்த மீன் என்ன சைவ பொருளா? இல்லை மீனவர்கள் மக்கள் விளையாடுவதற்கு மீனை பிடித்து கொடுத்தார்களா?
ஆதியில் இருந்து இது போன்ற தொழில்களையே செய்து வந்தவர்கள் தமிழர்கள்.
ஒரு சிலர் கூறுகிறார்கள் மனிதன் சைவ பிராணி என்று.
நமது உடல் அதற்கு ஒவ்வாத எந்த பொருளையும் உடனே வெளியேற்றும். உடலுக்கு ஏற்று கொள்ளாத பொருளை தொடர்ந்து திணித்தால் மரணம் வரும். இது கூட அறியாத முட்டாள்களா தமிழர்கள்?
உடலுக்கு சேராத பொருள்கள் அனைத்தும் விசம் என்றே அழைக்கப்பட்டது. ஒரு வேளை இவைகள் உடலுக்கு ஏற்ற பொருள்கள் இல்லை என்றால் மனிதன் காட்டில் வாழும் போதே இதை விலக்கி வைத்து இருப்பான்.
இத்தனை ஆயிரம் ஆண்டுகளான அறிவு மூடத்தனம் என்று பரப்புரை செய்கிறார்கள் என்றால் அது ஏதோ உள்நோக்கத்துடன் தான் என்று அறிந்து கொள்ள வேண்டும்.
திருவள்ளுவர் சொல்லி இருக்கிறார் என்கிறார்கள். திருவள்ளுவர் சொன்னால் மக்கள் அதை ஏற்று கொள்ள வேண்டுமா?
இந்த நிலத்தில் தமிழர்கள் பலர் தமிழ் மொழியை அழகாக பயன்படுத்தி நல்ல பல கருத்துகளை உடைய பைபிளை கொண்டு மதமாற்றம் செய்கிறார்கள்.
உடனே அது தமிழில் உள்ளது, சொன்னவரும் தமிழர், நல்ல கருத்துகளும் நிறைய அந்த புத்தகத்தில் உள்ளது என்று சொல்லி தமிழர்கள் அனைவரும் மதம் மாறிவிடுவோமா?
இல்லை அதில் சொல்லப்பட்ட அனைத்தையும் ஏற்று கொள்ளுவோமா?
சைவம் சாப்பிட்டால் தான் மிருகத்தன்மை போகுமாம்.
நீ சைவம் மட்டுமே சாப்பிட்டு கடவுள் தன்மை என்ற மாயையை அடைந்து கொள். பிராமனர்களை போல் வீரீயம் இல்லாமல் இரு!
நாங்கள் எங்கள் முன்னோர் வழியில் குலதெய்வ வழிபாடு செய்து வீரியமான & வலிமையான சந்ததியை உருவாக்குகிறோம்!
குலதெய்வ வழிபாட்டுக்கு திரும்புவோம்!
தமிழரின் வழிபாட்டை மீட்டெடுபோம்!
The wealth of Tamil people from the beginning until some years ago was mostly their goats and cows.
They even had large numbers of goats. Were the goats grown just for their milk?
Pandyan Kingdom had fish in their flag. This fishermen's race is one of the biggest race in Tamil Nadu.
Is the fish a vegetarian food? Or, did they caught the fishes for the people to play with it?
Tamils have done this kind of similar jobs since the beginning.
Some says human is a herbivore.
Our body will immediately expel any substance that is unnecessary. If we continue to take those unnecessary things, it might bring us to death too. Are Tamils so foolish to not even realize this fact?
All the things that are not acceptable by our body is called as poison. If those things are not acceptable by our body, then we would have keep them away while we living in the forest.
We have to know that, if they call our knowledge, which has been given by our ancestors for thousands of years as folly, they are doing it intentionally.
Some says Thiruvalluvar had talked about it too. But what is the necessity we should listen to whatever he says?
Many Tamils in this land are using the Bible (that translated to Tamil language) which talked about some nice ideas to convert the people into their religion.
So, should we all convert to Christianity just because the book is in Tamil language or the agent who doing the job is also a Tamil or the book consists of many good ideas?
Or, would we accept everything in that book?
Some says eating vegetarian food will prevent us from brutality.
You just eat vegetarian food and try to attain the illusion of God's nature. Be like the Brahmins and stay without vigor!
We will continue to worship in our ancestral way and create a strong & vigorous generation!
Let's go back to our ancestor worship!
And reinstate the worship of Tamils!