"புது பேருந்து நிலையம் அருகே கருத்தரித்தல் மையம் ஆரம்பிச்சிருக்காங்கப்பா. உன் மனைவிய கூட்டி போயி காட்டு."
பொருள் வாங்க கடைக்கு சென்ற பொழுது கடைக்காரருக்கு ஒரு வாடிக்கையாளர் வழங்கிய அறிவுரை.
வழக்கம்போல் இதையும் வளர்ச்சி என பெருமை பீற்றிக்கொள்ள ஒரு அறிவுசார் சமூகம் இருக்கும். அவர்கள் எப்படியோ போகட்டும்.
ஆனால் என் சிந்தையில் ஓடியவை பெரு நகரங்களில் மட்டுமே இருந்த இந்த நிலையங்கள் நகரங்களுக்கு பரவுவது குழந்தையற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதையே உணர்த்துகிறது. (ஒரு தொழில் தொடங்கப்படுகிறது எனில் தேவையான அளவு வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள் அல்லது உருவாக்கப்பட உள்ளனர் என்பதே மேலான்மை அடிப்படை)
எதிர்காலங்களில் கிராமம் வரை இது பரவி குழந்தை வேண்டும் என்றாலே கருத்தரிப்பு மய்யங்களுக்கு சென்றால் தான் முடியும் என்றாகி விடுமோ எனும் கவலையின் வெளிப்பாடு இந்த பதிவு.
நம் முன்னோர்கள் இப்படியா பிள்ளை பெற்றுக்கொண்டனர்.
நான் சங்க இலக்கிய ஆதாரமெல்லாம் தர விரும்பவில்லை. உங்கள் தாத்தா பாட்டியிடம் கேளுங்கள் எத்தனை பிள்ளைகள் எங்கு பெற்றனர் என? அவர்கள்
ஊசி போட்டு கொண்டனரா? மாத்திரை உண்டனரா? சிசேரியன் செய்தனரா?
ஏழு எட்டு குழந்தை வரை பெற்றவர்கள் மரபில் வந்த நமக்கு ஒரு பிள்ளைக்கே ஏன் இவ்வளவு சிக்கல். (6 லட்சம் வரை செலவு)
இதிலும் வணிகமா?
எனில் நம் வாழ்வியல் முறையில் எங்கோ பிழை உள்ளது என்று அர்த்தம்.
குழந்தை பிறப்பு என்பது இயற்கையின் ஒரு சாதாரண நிகழ்வு. எல்லா உயிர்களும் இயல்பாக இதை செய்கிறது. நம் முன்னோர்கள் கூட, ஆனால் அதில் கூட தடை/சிக்கல் என்றால் இதுவே இறுதி எச்சரிக்கை.
நம் வாழ்வியலை கேள்விக்கு உட்படுத்தி மறுசீராய்வு செய்து இயற்கைக்கு திரும்ப வேண்டிய நேரமிது.
நவீன யுவதிகள் பெரும்பாலானோர் கவலை ஒழுங்கற்ற மாதவிலக்கு. அதன் காரணமும் தீர்வும்
https://youtu.be/ug752ywbOpw - மகளிர் நலம்
நவீன ஆண்களின் கவலை ஆண்மை குறைவு. அதன் காரணமும் தீர்வும்
https://youtu.be/575QJH9fr4I - குழந்தைப்பேறு நலம்
ம, செந்தமிழன் அவர்களின் காணொளிகள்.
இது ஒரு புறமிருக்க குழந்தை கட்டுப்பாடு திட்டத்தில் தமிழகம் முன்னோடி மாநிலம் என்ற அரசின் பெருமை மற்றொரு புறம்.
இன அழிப்பு என்றால் துப்பாக்கி பீரங்கி மூலம் சுடுவார்கள் குண்டு வீசுவார்கள் என என்னுவது மடமையிலும் மடமை.
இரண்டு காணொளிகளை இனைத்துள்ளேன்.
என்னை பொறுத்தவரை இரண்டும் மதிப்பிட இயலா பொக்கிடங்கள்
பாருங்கள்
பின்பற்றுங்கள்
பகிருங்கள்
இயற்கையின் இறுதி அழைப்பு!