நீங்கள் வேறு
நாங்கள் வேறு
உங்க பண்பாடு வேறு
எங்க பண்பாடு வேறு,
உங்களுக்கு தயிர்சாதம்
எங்களுக்கு கறி சோறு,
உங்களுக்கு ஆசிர்வாதம்
எங்களுக்கு வாக்கு,
உங்களுக்கு ஜால்ரா
எங்களுக்கு பறை, பம்பை, உடுக்கை,
உங்களுக்கு கதாகலச்சேபம்
எங்களுக்கு தெருக்கூத்து,
உங்களுக்கு பாசிங்கு
எங்களுக்கு வேட்டி,
உங்களுக்கு வேதம்
எங்களுக்கு குறி,
உங்களுக்கு மாட்டு மூத்திரம்
எங்களுக்கு சாராயம்,
உங்களுக்கு நெய்வெத்தியம்
எங்களுக்கு படையல்,
உங்களுக்கு கலசம்
எங்களுக்கு கரகம்,
உங்களுக்கு அய்யர்
எங்களுக்கு நாங்களே பூசாரி,
உங்களுக்கு கோபுரம், கலசம் அவசியம்
எங்களுக்கு மண்மேடோ, மரத்தடியோ போதும்,
உங்களுக்கு கடவுள்
எங்களுக்கு மூதாதையர்,
உங்களுக்கு புராணங்கள், இதிகாசங்கள்
எங்களுக்கு நாட்டார் கதைகள்,
உங்களக்கு கானசபா
எங்களுக்கு நாட்டுப்புற மேடை,
உங்க சாமியை நாங்க தொட்ட தீட்டு
எங்க சாமியை நாங்க தொடாவிட்டால் தீட்டு,
உங்க சாமி உங்கள் மேல் வராது
எங்க சாமி எங்கள் மேல் இறங்கும்,
உங்களுக்கு பெரியவா
எங்களுக்கு பெரியார்க்கு எல்லாம்
பெரியார் எங்கள் தமிழர் மூதாதையர்கள்,
உங்களுக்கு சமஸ்கிருதம்
எங்களுக்கு தமிழ்,
உங்களுக்கு ஏய்த்து பிழைப்பது
எங்களுக்கு இசைந்து வாழ்வது,
உங்களுக்கு சீரழிப்பது
எங்களுக்கு சீர்படுத்துவது,
உங்களுக்கு ஒடுக்குவது
எங்களுக்கு ஒத்திசைவது,
உங்களுக்கு பறித்துண்பது
எங்களுக்கு பகிர்ந்துண்பது,
உங்களுக்கு நில உடைமை
எங்களுக்கு தனி உடைமை,
உங்களுக்கு சர்வாதிகாரம்
எங்களுக்கு ஜனநாயகம்,
உங்களுக்கு சுயநலம்
எங்களுக்கு பொதுநலம்,
உங்களுக்கு பிரித்தாழ்வது
எங்களுக்கு சேர்ந்து வாழ்வது,
உங்களுக்கு மணியாட்டி
எங்களுக்கு ஏரோட்டி,
உங்களுக்கு ஆவணி அவிட்டம்
எங்களுக்கு ஆடிப்பட்டம்,
உங்களுக்கு மனுநீதி
எங்களுக்கு மனித நீதி,
உங்களுக்கு சாணக்கியநீதி
எங்களுக்கு சமநீதி,
உங்களுக்கு சாதிக்கு ஒரு நீதி
எங்களுக்கு சமுக நீதி,
ஏன் என்றால்
நீங்கள் நாடோடி கூட்டத்தின் அடிமை
நாங்கள் பூர்வகுடிகள்
நீங்கள் காவிகளின் அங்கம்
நாங்கள் காவிகளை கருவறுக்க வந்த கருப்புகள்
நீங்கள் ஆரியத்தின் மிச்சம்
நாங்கள் தமிழத்தின் தென்மம்
#ராமர்சாமி வந்தாலும்
#ராமசாமி வந்தாலும்
எங்களையும்
எங்கள் வழிபாட்டையும்
அழிக்க முடியாது!
Facebook post link
Computer : https://bit.ly/2lElwvH
Mobile : https://bit.ly/2N05U1R