ஒவ்வொரு மீம் படவிளக்கத்திலும் கூடுதல் தகவல்களும் சில கேள்விகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் தெரிந்தவர்கள் கூறுங்கள். தெரியாதவர்களுக்கு அடுத்தடுத்த பதிவுகளில் பதில் தருகிறோம்.
கோவிந்தா- அரோகரா
இது போன்ற வார்த்தைகள் வழக்கு மொழியில் போனது போனதுதான் திரும்ப வராது என்று அர்ததம்!
நம் முன்னோர்கள் தெளிவாக இவர்களைப்பற்றி கடத்தியிருக்கிறார்கள். இவர்கள் செய்வது அனைத்தும் நம் வாழ்வியலுக்கு உகந்தது அல்ல என்பதை.
வழக்கு மொழியில் வரலாற்றையும் மரபறிவையும் தேடுங்கள்!
வட்டி
காவல் என்பதற்கு எவ்வளவோ ஆங்கில வார்த்தை இருக்க ஏன் போலிசு (Police)?
ராசராசன் தான் கொள்ளையடித்த பொருளை கோவிலின் பெரும் பண்டாரத்தில் (fund) முதலீடு வைத்தான். பல பெரும் செல்வரும் அதில் முதலீடு செய்தனர்.
அச்செல்வம் 12.5% வட்டிக்கு மக்களுக்கு வழங்கப்பட்டது. வட்டிக்கு பொலிசை என்ற சொல்லே கல்வெட்டுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பொலிசையை செலுத்தாதவரிடம் இருந்து பொலிசை வசூலிக்கும் படையே பொலிசை படை.
தற்பொழுதும் அரசின் அடியாட்கள் போலிசு (Police) என்றே அழைக்கப்படுகின்றனர். ஆங்கிலமும் ஆங்கில அரசும் இங்கே இருந்து சென்றவனாலையே உருவாக்கப்பட்டது.
இதிலிருந்து தஞ்சாவூர் கோவில் வணிக நிறுவனமாக செயல்பட்டது என்று தெரிகிறது. இதேமாதிரி ஒவ்வொரு பெருங்கோவில்களும் செயல்பட்டது. தற்போது உயர்ந்த கட்டிடங்களில் நடக்கும் வணிகம் அப்போது உயர்ந்த பெருங்கோவில்களில் நடந்தது!
கந்து வட்டி
கந்தன் எப்படி மீசையில்லாமல் பளபளபன்னு அழகாக இருக்கிறார்? முல்லையின் தலைவன் அரண்மனையில் வாழ்ந்தவனா என்ன?
கந்தனின் அறுகோணமும் இசுரேல் கொடியில் உள்ள அறுகோணமும் எப்படி ஒன்றாக உள்ளது? இங்கிருந்த முல்லைத் தலைவனின் இலட்சினை அவர்கள் ஏன் பயன்படுத்தனும்?
இசுரேல் உலக வணிகத்தை தன் கையில் வைத்திருப்பதாக சொல்கிறார்கள். அப்படினா கந்தன் யாராக இருப்பார்?
மேலும், கந்து வட்டிக்கு கடன் வாங்கினால் உங்கள் சொத்து அரோகராதான் என்று இன்றளவும் சொல்லும் வழக்கம் உள்ளது.
சிவன் சொத்து குலநாசம்
முதலில் கடவுளிடம் எப்படி அவ்வளவு சொத்து சேர்ந்தது என்ற கேள்வி எழுந்திருக்கிறாதா?
நம் குலதெய்வக்கோவில்களின் சொத்துகள் எவ்வளவு என்று யோசித்தது உண்டா? மேலும் கொள்ளையடிக்கும் அளவிற்கு தனி மனிதனுக்குமில்லாமல் கோவிலில் குவித்தது எப்படி?
போராளிகள் உருவாக்குகிறார்கள் என்றால் அங்கு சமநிலை இல்லையென்பது உறுதி செய்கிறது இந்த கோவில்கள். இதை மீறி அங்குள்ள பொருள்களை கொள்ளையடித்தவர்கள் பிடிபட்டால் கொன்று கழுவேற்றுவார்கள்.
தசாவதாரம் படத்தில் கமலை தொங்க விடுவார்களே சிவநாம்ம் சொல்லச்சொல்லி. அப்படிதான் கொன்று கழுவேற்றுவார்கள்!
பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கதையை தேடுங்கள். இதே மாதிரி ஒரு விடயம் கிடைக்கும். ஒற்றுமையை ஒப்பிடுங்கள். உண்மை விளங்கும்!
பட்டை - நாமம்
வழக்கில் மோசமானதாக (ஏமாற்றுவதற்கு) குறிக்கப்படும் இந்த வார்த்தைகள் கோவில்களின் குறியீடுகளுக்கு சொந்தமானதாக இருக்கிறது. அதெப்படி?
ஒன்று, கோவிலுக்கு எதிரானவர்கள் அந்த வார்ததைக்கு அப்படி ஒரு விளக்கத்தை கொடுத்திருக்கவேண்டும். அப்படி கொடுத்திருந்தாலும் வழக்கு மொழியில் எளிதாக இணைந்து இருக்காது.
மற்றொன்று, கோவிலில் நடந்த விடயங்களின் அனுபவங்களால் நம் முன்னோர்கள் பயன்படுத்திய விதம் அப்படி இருந்திருக்கும். இதில் முன்னோர் கடத்தியதையே நம்மால் நம்ப முடியும்!
கடவுள் வணிக உருவங்கள்
உங்களுக்கு நம்பிக்கையில்லையெனில் இந்திய வணிகத் தலைநகரில் விநாயகர் (வணிக்ககடவுள்) ஊர்வலம் மிகப்பிரபலம் என்பதை நோக்குங்கள். இதை விட வணிகத்திற்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தை எளிதாக சொல்ல முடியாது.
இப்ப உள்ள பெரிய வணிக நிறுவனங்கள் எடுத்துக்காட்டாக பங்குச்சந்தைக்கும் கூலி வேலைக்கும் சம்பந்தமிருக்கிறதா?
அதே மாதிரிதான் அப்ப உள்ள பெருங்கோவில்களுக்கும் தமிழ் பழங்குடிகளுக்கும் சம்பந்தமில்லை. வணிகன் அவன் முன்னோரை அவன் வணிகதளத்தில் கும்பிட்டான். இப்ப எல்லாரையும் கும்பிட வைத்திருக்கிறான்!