17 Apr


இயற்கையின் வழியில் புத்தாண்டு எதுவெனில், தை 1-ஆக இருக்கலாம். ஒரு நாளின் தொடக்கத்தை சூரிய உதயமே தீர்மானிக்கிறது. ஒரு நாள் சுழற்சியின் மிக அதிக குளிர் கொண்ட நேரமான அதிகாலை நேரத்தில்தான் சூரியன் விண்ணைக் கிழித்துக்கொண்டு நாளின் தொடக்கத்திற்கு வித்திடுகிறது. அதேபோல் ஓர் ஆண்டு சூழற்சியில் உச்சபட்ச பனிக்காலமான மார்கழியில் தான் விண்ணைக் கிழித்துக்கொண்டு சூரியன் தனது ஆண்டைத் தொடங்க வேண்டும். அதாவது நாளின் தொடக்கமும் ஆண்டின் தொடக்கமும் பனிமிகுதியில் தான் அமைய வேண்டும். இது இயற்கையின் விதி. கீழே கொடுத்திருக்கும் ஒப்புமைகளை ஆராய்க.

06 am to 08 am - 2 மணி நேரங்கள் = தை - 30 நாள்கள் (தோராயமாக)
08 am to 10 am - 2 மணி நேரங்கள் = மாசி - 30 நாள்கள்
10 am to 12 pm - 2 மணி நேரங்கள் = பங்குனி - 30 நாள்கள்
12 pm to 02 pm - 2 மணி நேரங்கள் = சித்திரை - 30 நாள்கள்
02 pm to 04 pm - 2 மணி நேரங்கள் = வைகாசி - 30 நாள்கள்
04 pm to 06 pm - 2 மணி நேரங்கள் = ஆனி - 30 நாள்கள்
06 pm to 08 pm - 2 மணி நேரங்கள் = ஆடி - 30 நாள்கள்
08 pm to 10 pm - 2 மணி நேரங்கள் = ஆவணி - 30 நாள்கள்
10 pm to 12 am - 2 மணி நேரங்கள் = புரட்டாசி - 30 நாள்கள்
12 am to 02 am - 2 மணி நேரங்கள் = ஐப்பசி - 30 நாள்கள்
02 am to 04 am - 2 மணி நேரங்கள் = கார்த்திகை - 30 நாள்கள்
04 am to 06 am - 2 மணி நேரங்கள் = மார்கழி - 30 நாள்கள்

ஒரு நாளுக்கு பொழுதுகள் 6. ஒரு ஆண்டுக்கு பருவங்கள் 6. ஒரு நாள் காலை தொடங்கி அடுத்த நாள் காலை வரைக்கும் உள்ள 6 பொழுதுகளிலும் எவ்வாறு வெப்பம் படிப்படியாக ஏறி இறங்குகிறதோ அவ்வாறே ஓர் ஆண்டின் 6 பருவங்களிலும் வெப்பம் படிப்படியாக ஏறி இறங்கும். இவ்விரண்டும் ஒரே போக்குடையது. இது சூரியனின் வழியில் தை 1-க்கு பொருந்துகிறது. நிலவுக்கும் ஆண்டு சுழற்சி உண்டு. அது வேறு.

எல்லா வணிக சமூகங்களுக்கும் ஏற்ற மாதங்கள் தான் இந்த மாசி, பங்குனி பின்பனிக்காலம். இந்த மழைபெய்யா மற்றும் நல்ல வெளிச்சம் உள்ள மாதங்களில் தான் வணிகர்கள் தங்களின் வணிகப் பொருட்களை வெகுதூரம் கொண்டு செல்லமுடியும். மழைக்காலங்களில் உப்பு விற்க முடியாது. காற்றுக் காலங்களில் பஞ்சு விற்க முடியாது. அதனால்தான் எல்லா வியாபாரத்துக்கும் ஏற்ற இந்த வெயில் மாதங்களான மாசி, பங்குனியை வணிகர்கள் தேர்ந்தெடுத்து வணிகம் செய்ய நெடுந்தூரப் பயணம் செய்தனர்.

தை மாதம் அறுவடை செய்த பணப்பயிர்களைக் கொண்டு சென்று இம்மாதங்களில் விற்றுத்தீர்த்து தங்களின் பழைய லாப நட்டக் கணக்குகளை முடித்து சித்திரை 1-ல் புதுக் கணக்கு துவங்குகின்றனர். எந்த திணைக்கும் தொடர்பில்லாத வணிகர்களின் புத்தாண்டான இந்த சித்திரை 1-ஐ தமிழர்களுக்கான புத்தாண்டாக கூறுவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.

தமிழ்நாட்டு வணிகர்கள் கடைபிடித்த சூரியன் உச்சமடையும் மாதமான சித்திரை 1-ஐத் தான் ஏறக்குறைய இன்றைக்கும் எல்லா வங்கிகளும் கடைபிடிக்கிறது. மார்ச் மாதம் ஆண்டு இறுதிக்கணக்கை முடித்து புதிய கணக்கை துவங்கும் போது நாம் எல்லாரும் April Fool ஆக்கப்பட்டோம். நம்மை முட்டாளாக்கியவன் வணிகன்.

இந்த காணொளியை (https://youtu.be/tPUnNeoXwkU) சரியாக 00:00 நிமிடத்திலிருந்து 00:12 வரைக்கும் மற்றும் 03.35 நிமிடத்திலிருந்து 05:40 வரை பாருங்கள்.

கடலைப் பற்றி முழுமையாக ஆய்வு செய்ததால் தான் திரு. ஒரிசா பாலு அவர்கள் சித்திரை 1 என்பது கடல் வணிகர்களான மாநாய்கன் மற்றும் நில வணிகனான சாத்தன் ஆகியோர்களால் ஆண்டுப்பிறப்பாகக் கொள்ளப்பட்டது என்கிறார். தமிழ்நாட்டில் உள்ள ஏறக்குறைய 240 கோயில்களில் கடல் ஆமைகளின் சிற்பங்கள் உள்ளதாக கூறுகிறார். ஆனால் ஏனைய 30,000-க்கும் மேற்பட்ட சூரிய வழிபாட்டு கற்கோயில்கள் தமிழ்நாட்டில் உள்ளது. இவையனைத்திலுமே ஆமையைத் தவிர பல கடல்வாழ் விசித்திர உயிரினங்களின் சிற்பங்கள் உள்ளதை அவர் கூறாமல் மறைக்கிறார்.

அப்படி கூறினால் தமிழகத்தில் அனைத்து கோயில்களுக்கும் உண்மையான முதலாளிகள் கடல் சாத்தன்களே என்ற உண்மை வெளிவந்துவிடும் அல்லவா? அதோடு அனைத்து பெருங்கோயில்களிலுமே சித்திரை 1-ஐத் தானே ஆண்டுப்பிறப்பாக கொண்டாடுகிறார்கள் என்பதை நோக்கவும். ஆக சித்திரை 1 என்பது சூரியன் உச்சமடையும் நாளைக் குறிக்கும் சூரிய வழிபாட்டாளர்களால் கடைபிடிக்கப்படும் ஒரு புத்தாண்டே தவிர எந்த தமிழ் திணைப்பழங்குடிகளுக்கும் இப்புத்தாண்டிற்கும் தொடர்பில்லை.



Tai 1 (Tamil month) can be the new year in the way of nature. Sunrise decides the beginning of a day. The sun rise during early morning, which is after the coldest hours, is what determines the start of a solar day. Similarly, a solar calendar must start its year after the coldest month in a year's cycle, Markazhi. So, the beginning of a day and year should be on the snowy time. This is a law of nature. Explore the comparisons given below.

06 am to 08 am - 2 hours = Tai - 30 days (Approximately)
08 am to 10 am - 2 hours = Masi - 30 days
10 am to 12 pm - 2 hours = Pankuni - 30 days
12 pm to 02 pm - 2 hours = Cittirai - 30 days
02 pm to 04 pm - 2 hours = Vaikasi - 30 days
04 pm to 06 pm - 2 hours = Ani - 30 days
06 pm to 08 pm - 2 hours = Adi - 30 days
08 pm to 10 pm - 2 hours = Avani - 30 days
10 pm to 12 am - 2 hours = Purattasi - 30 days
12 am to 02 am - 2 hours = Aippasi - 30 days
02 am to 04 am - 2 hours = Karttikai - 30 days
04 am to 06 am - 2 hours = Markazhi - 30 days

There are 6 divisions on a day. There are 6 seasons a year. A day which begins in this morning and ends on the next day morning, will see the temperature rises and drops progressively throughout the six divisions of a day. Similarly, a year will see the temperature rises and drops progressively throughout the six seasons. These two have the same trend. This can be applied to the Tai 1 in the Sun's way. The moon too has a year cycle, that is different.

The months of Maasi and Pankuni, called "pin-pani" season, are the ideal months for the traders. In these months which have bright skies and not raining, traders can take their goods far away to trade. Salt can not be sold during the rainy season. Cotton can not be sold in windy season. That is why the traders preferred Maasi and Pankuni months, to travel far and trade because it's suitable time for all kinds of businesses.

They will bring all the cash crops harvested in the month of Tai, sell in the pin-pani months, close their profit and loss account for that year, and starts their new account on Cittirai 1. So, we do not agree with the statement, Cittirai 1 is Tamil New Year, which has no connection with any geographical "thinais", but only being followed by the traders.

Nowadays, all banks follows almost the same calendar which has been used by Tamil Nadu traders, that starts with month of Cittirai, when the Sun is on its peak. We all have been April-fooled, during when the banks will close their old accounts on end of March and begins new account on April. We have been fooled by the traders.

Watch this video (https://youtu.be/tPUnNeoXwkU) exactly from 00:00 to 00:12 and 03.35 to 05:40.

Mr. Orissa Balu can claim that (sea and land) traders use the calendar with Cittirai as the new year, because he had thoroughly studied about the sea. According to him, nearly 240 temples in Tamil Nadu have the sculptures of sea turtles. But there are more than 30,000 sun-worship temples in Tamil Nadu. He concealed that those temples have many other strange marine species' sculptures apart from those sea turtles.

Because, if he say so, the truth about all the temples in Tamil Nadu will be disclosed, right? The truth that the real owners of all those big temples are actually the sea traders. In addition, notice that all the big temples celebrating Cittirai 1 as the new year. Hence, Cittirai 1 is the day when Sun reaches the peak in its orbit, thus celebrated as new year by the sun worshipers only. The Cittirai new year has no connection with the Tamil thinai people, in any means.

Comments
* The email will not be published on the website.
I BUILT MY SITE FOR FREE USING