29 Jan


1960 - 70 களில் எம்மக்கள் பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கிய சமயம், அவர்களின் மாற்றுச் சான்றிதழ்களில் "இந்து" என்று வலுக்கட்டாயமாக எழுதச்சொன்னது அரசாங்கம். அது வரை குலதெய்வவழிபாட்டளர்களாக இருந்து வந்த நம்மவர்களுக்கு "இந்து" என்ற சொல் புதிதாக இருந்தது.

சைவம்-வைணவம் சண்டை போட்டது. சமணம்-சைவம் சண்டை போட்டது. இசுலாமிய பிரிவுகளான ஷியா-சுன்னி பிரிவுகள் தங்களுக்குள்ளேயே நாயும், பேயுமாக அடித்துக் கொண்டு பல பெண்களின் தாலியறுத்தது. ஆனால் இதுவரை குலதெய்வ வழிபாடு செய்பவர்கள் என் தெய்வம் பெரியது, இல்லை இல்லை என் தெய்வம்தான் பெரியது என்று அடித்துக் கொண்டதாக செய்திகள் உண்டா?

நிச்சயமாக இல்லை. காரணம் வழிபாடு வேறு, மத நிறுவனம் வேறு. குலதெய்வ வழிபாடு என்பது அவரவர் தம் இரத்தவழி முன்னோர்களின் வழிகாட்டுதலின் பேரில் இளையோர்களால் கடைபிடிக்கப்படுவது. ஆனால் மதக்கோட்பாடுகள் என்பது நம் இரத்தவழி அல்லாத வணிகர்களால் காசு கொடுத்து நடத்தப்படும் மதநிறுவனங்களைக் கொண்டு மக்களை மூளைச்சலவை செய்வது.




When our people first went to school in the 1960's - 70's, they were forcibly asked by the government to write that they are "Hindus" in their certificate. Until then, the word "Hindu" was very new to those of us who were the ancestor worshippers.

Shaivism and Vaishnavism were in fight. Shaivism and Sramana were in fight too. Even the two main Islamic branches Shia Islam and Sunni Islam were fought like hell which made many women as widows. But have you heard that there is a fight over whose Family Deity is greater?

It won't happen because worshiping and religion (corporation) are different. Ancestor worship (Family Deity) is what being followed by the youngsters with the guidance of their ancestors of same bloodline. But religious principles are to brainwash people in the name of a religion which is sponsored by merchants who are not our bloodline.



Comments
* The email will not be published on the website.
I BUILT MY SITE FOR FREE USING