28 Oct


உலகநாடுகளில் பல இடங்களில் Halloween Day (ஆவிகளின் திருவிழா) = Oct 31 என்றும்

All Souls' Day (கல்லறைத் திருநாள்) = Nov 2 என்றும்

கொண்டாடப்படும் திருவிழா இந்தியாவில் மட்டும் இறந்த முன்னோர்களை விரட்ட கூடிய நாளாக மாறியது எப்படி?

தீபாவளி = அக்டோபரின் இறுதி நாட்கள் அல்லது நவம்பரின் ஆரம்ப நாட்கள் (ஐப்பசி அமாவாசை - மறைநிலவு)

மற்ற இரு பண்டிகைகளிலும் (இருளை) முன்னோரின் நினைவலைகளை கொண்டாடும் போது தீபாவளி மட்டும் இருளை விலக்கச் சொல்வதில் முரண் தெரிகிறது.

ஐப்பசி - ஐ - கருப்பு பசி

கருப்பு பசியாக இருக்கும் மாத அமாவாசை நாள்.

'ஐ' எனப்படும் இருள்சக்தி உச்சத்தில் இருக்கும் நள்ளிரவு 12.00 to 2.00 மணிக்கு கிடாய் வெட்டினால் தான் அதிகாலை 4.00 to 6.00 கறி சமைக்க முடியும். தீபாவளி அன்று மட்டும் அதிகாலையிலேயே எழுந்து கறி சமைக்கும் வழக்கம் தமிழர்களிடையே இன்று வரை தொடர்வது முன்னோர்களுக்கு படையல் போட்டதின் நீட்சியாக இருக்கலாம்.

ஆண்டுக்கு 12 அமாவாசை இருந்தும் குறிப்பாக ஐப்பசி அமாவாசை அன்று மட்டும் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே அசைவம் சமைக்கக் கூடாது என்னும் கட்டுப்பாடு விதித்து கடுமையான கேதார கௌரி விரதம் இருக்கச் சொல்வதின் நோக்கம் என்ன? இது எவன் செய்த வேலை?

வீதியெங்கும் விளக்கேற்றுவது
தீயசக்தியை விரட்ட

வீதியெங்கும் பட்டாசுகள் வெடிப்பது
தீயசக்தியை விரட்ட

அசைவம் சமைக்காமல் விரதம் இருப்பது
தீய சக்தியை விரட்ட

வருசத்துல எவ்வளவோ அமாவாசை இருக்கும் போது ஏன் குறிப்பா அந்த நாள் மட்டும் இதையெல்லாம் செய்யச் சொல்லுறாங்க? தீய சக்தி உச்சத்துல இருக்குற நாளில்தானே அதை விரட்ட வேண்டிய தேவை வருதுன்னு சொல்லாம சொல்லுறாங்க.

அந்த தீய சக்தி வேறு யாரும் இல்லைங்க. நம் முன்னோர்களின் நினைவலைகள் தான். அந்தப் பண்டிகை தான் தீபாவளி.

Oct 31, Nov 1 & 2 ம் நாட்கள் ஐப்பசி மாதத்தில்  நடுவில் வரும் நாட்கள்.  இந்த நாட்கள் ஐப்பசி மாதத்தின் 30 நாட்களில் 14, 15, 16 ஆகிய தமிழ் தேதிகளில் வரும் நடு நாட்கள் ஆகும்.

ஐப்பசி மாதம் துலாம் இராசியை குறிக்கும் மாதம். இங்குதான் இருள் எனும் சனி உச்சபட்ச சக்தியையும், ஒளியெனும் சூரியன் முழுபலம் இழந்த இராசியும் மாதமுமாக வருகிறது.

இந்நிலையில் மேலும் இருளின் பலம் சேர்க்கும் நாள் தான் "ஐப்பசி அமாவாசை".

தீர்வு :

ஐப்பசி அமாவாசை தான் தீபாவளி. இது உறுதி. தீபாவளி எப்ப வருதுன்றது முக்கியம் இல்ல. நமக்கு ஐப்பசி அமாவாசை தான் உண்மையான தீபாவளி. முன்னோர்களின் நினைவலைகளுக்கு படையல் போட வேண்டும். இதை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் கௌரி கேதார நோன்பு என ஒன்றை உருவாக்கி தீபாவளியன்று வைத்தான். அந்த விரதம் கடைபிடிக்கப்படும் நாளுக்கு முந்தைய நாளிலும். பிந்தைய நாளிலும் கட்டாயம் சைவ விரதம் இருந்தே ஆக வேண்டும். எதிரி நம் முட்டாள் மக்களுக்கு சொருகிய பெரிய ஆப்பு. புரியுதா?



Comments
* The email will not be published on the website.
I BUILT MY SITE FOR FREE USING