06 Nov


அனைவருக்கும் முன்னோர் படையல் பெருவிழா வாழ்த்துகள்

நம் குடும்ப முன்னோர்களுக்கு நாம் செலுத்த வேண்டிய அசைவப் படையலை தடுக்கவும் மறைநிலவு அன்று வீரியம் கொள்ளும் முன்னோர் நினைவலைகள் வீட்டு வாசலிலேயே அனுப்பவும் எதிரிகள் தீட்டிய திட்டம் தான் தீபாவளி என்பது அனைவரும் அறிந்த விசயம் ஆகும். இதை முன்பே நாம் விளக்கமாக பார்த்துவிட்டோம்.

தற்போது ஐப்பசி என்ற கருப்பு பசியாக இருக்கக்கூடிய மறைநிலவு அன்று நாம் அனைவரும் நம் முன்னோர்களுக்கு படையல் போடுவது நம்முடைய முதன்மையான கடமைகளுள் ஒன்றாகும்.

நீங்கள் தீபாவளி (06/11/2018) அன்று வெடி வெடித்தாலும் பரவாயில்லை ஆனால் நாளை புதன்கிழமை (07/11/2018) மதியம் உச்சிவேலை 12 மணிக்கு வீடுகளில் வெடி வெடிக்காமல் வீட்டில் அசைவப் படையல் செய்து வீட்டு முன்னோர்களுக்கு படையல் போடுங்கள்.

முடிந்தவர்கள் இரவு நேரத்திலும் செய்யலாம். இன்று (06/11/2018) இரவு 10:40 முதல் நாளை (07/11/2018) இரவு 10:00 வரை.

இரண்டு நேரமும் உகந்தது தான் ஆனால் பகல் நேரத்தில் செய்தால் இன்னும் நல்லது. இங்கு இரத்தம் சிந்துவதே முக்கியமானது.

அவர்களை பசியிலேயே தவிக்க விடாதீர்கள். நம்முடைய இந்த உடலும், தான் என்ற உணர்வும் அவர்களிடமிருந்தே நமக்கு கிடைத்தது என்பதை மறந்துவிடாதீர்கள். நம்முடைய முன்னோர்களின் நினைவலைகள் நம்மை வழி நடத்தட்டும்!

நமது முன்னோர்களின் உடல் விட்ட நினைவலைகள் மறைநிலவு மற்றும் கிரகண நேரத்தில் வீரியமடையும் என்பதை உணர்ந்து அவர்களுக்கு பலியிட வேண்டும் அல்லது அசைவமாவது படைக்க வேண்டும். அந்த நேரம் பலிகொடுத்து அவர்களுடன் நமக்கு ஒரு உடன்படிக்கை செய்து கொள்ளலாம். கருப்புகள் எப்போதும் உடன்படிக்கைக்கு கட்டுப்படும்.

குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடிந்தவர்கள் அங்கே சென்று கிடாய் அல்லது சேவல் பலியிடுங்கள். பலி கொடுத்த கிடாய் அல்லது சேவலை அங்கேயே சமைத்து சாப்பிட்டு வாருங்கள். அதை உங்கள் வீட்டில் உள்ள வயதில் மூத்தாரின் முன்னிலையில் அவரின் தலைமையில் செய்யச் சொல்லுங்கள். உங்கள் வேண்டுதல் உண்மையாயின் நிச்சயம் உங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவரின் மீது வந்திறங்கி குறிசொல்லி உங்களுக்கு நல்வழி காட்டும்.

முடியாதவர்கள் உங்கள் முன்னோர்களுக்கு வீட்டிலே படையல் போடுங்கள். வெளியே இறைச்சி வாங்கி வந்து இல்லை. வீட்டிலேயே சேவலை அறுத்து படையல் போடுங்கள். சேவலை பலியிட்டு அதை வீட்டில் சமைத்து முன்னோர்களின் புகைப்படம் வைத்தோ வைக்காமலோ (புகைப்படம் வெறும் நம் கருத்துக்காக மட்டுமே, இருந்தாக வேண்டிய அவசியமில்லை) அதை படைத்து அதை காகைக்கு வைத்து பின்பு வீட்டு ஆண்கள் உண்ட பிறகு பெண்கள் உண்ண வேண்டும்.

இங்கே நாம் சொல்லும் கருப்பு அல்லது முன்னோர் நினைவலை, அனைத்துமே இந்த அமாவாசை நேரத்தில் வீரியமாக தான் இருக்கும். ஆகவே நீங்கள் வீட்டிலே செய்யலாம் அல்லது உங்கள் குலதெய்வ கோவில்களுக்கு சென்றும் செய்யலாம். அவரவர் வசதிக்கேற்ப செய்யுங்கள். உங்கள் விருப்பம்.

படையல் பெருவிழா வாழ்த்துகள்

குலதெய்வ வழிபாட்டுக்கு திரும்புவோம்!
தமிழரின் வழிபாட்டை மீட்டெடுபோம்!




Comments
* The email will not be published on the website.
I BUILT MY SITE FOR FREE USING