சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்யலாம் என்ற உச்சநீதி மன்றத் தீர்ப்பை வரவேற்கிறேன் - மதுரை ஆதினம்.
சபரிமலையில் பெண்களை அனுமதித்த தீர்ப்பு இந்துக்களின் மதனை புண்படுத்தும் விதம் உள்ளது. மறுபரிசீலனை செய்ய வேண்டும் - ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ஜீயர்.
சமணம் vs சைவம் சண்டை தான் இன்றைய வைணவம் vs சைவம் சண்டை.
சமணத்தை ஒழித்த வெள்ளாளர்கள் அந்நிறுவன மடங்களைக் கைப்பற்றி சைவ மடங்களை அமைத்தனர்.
தப்பிப் பிழைத்த சில சமணர்கள் (பார்சுவநாதனின் சீடர்கள்) முல்லை நில குடிகளுடன் இணைந்து சைவர்களுக்கு எதிராக வைணவத்தை உருவாக்கினர்.
சைவத்துக்கு ஸ்பான்சர் செய்தது காரைக்கல் அம்மையார் என்ற செட்டிச்சி.
வைஷ்ணவத்தை (அதாவது வைஷியர்களின் மதம் - வணிகர்களின் மதம் என்று பொருள்) வளர்த்த ஆழ்வார்களை ஸ்பான்சர் செய்தது சைவர்களின் ஆதிக்கத்தில் இருந்து தப்பிய சில வணிகர்கள் ஆவர்.
வைணவ ஜீயர்களின் கழுத்தில் இருக்கும் ஏழு வண்ண ஆசீவக மாலையே இதற்குச் சான்று.
அதனால் தான் சமணத்தின் தலைமைச் சாத்தனான ஐயப்பன் கோவில் பாழ்படுவதை சைவர்கள் விரும்புகிறார்கள். வைணவர்கள் வருத்தப்படுகிறார்கள்.
இவ்வளவு தான் வரலாறு. இயங்கியல் என்றுமே மாறாது.
- சிவக்குமார்