06 Apr


இது எதை குறிக்கிறது என தெரிகிறதா?

"தரும விஜயம் (அறவெற்றி) என்னும் வெற்றியே மாட்சிமைமிக்க அரசரால் (அசோக மன்னரால்) முதல் தரமான வெற்றியென்று கருதப்படுகின்றது. இந்த வெற்றி இந்த இராச்சியத்திலும், இதற்கப்பாற்பட்ட அறுநூறு யோசனை தூரத்திலுள்ள அண்டியொகஸ் என்னும் யவன அரசனுடைய தேசத்திலும், அதற்கு அப்பால் டாலமி, அண்டிகொனஸ் மகஸ், அலெக்ஸாந்தர் என்னும் பெயருள்ள நான்கு அரசர்களின் தேசங்களிலும், இப்பால் தெற்கேயுள்ள சோழ, பாண்டிய, தாமிரபரணி (இலங்கை) வரையிலும் இந்த (அற) வெற்றி அரசரால் அடிக்கடி கைப்பற்றப்பட்டது."

இந்தச் சாசனம் கி. மு. 258-இல் எழுதப்பட்டது. கிரேக்கர்களையும் ரோமானியர்களையுமே யவனர் என்று அழைப்பர்.

கிழக்கிந்திய கம்பெனி யாருடையது?

9 வகையான நுட்பங்கள் தெரிந்த 9 மர்ம நபர்களை அசோகர் பல தேசங்களுக்கு அனுப்பினார். அவர்கள் உலகத்தால் புரிந்துகொள்ள முடியாத பல விடயங்களை தன்வசம் வைத்து இருந்தனர் என அசோக வரலாறு சொல்கிறது. இது தான் அசோகர் உருவாக்கிய அந்த இரகசிய அமைப்பு. இப்படிப்பட்ட இந்த இரகசிய அமைப்பை பற்றி முதலில் எழுதியவர் தல்போட் முண்டி என்ற ஆங்கில நாவலாசிரியர். இவர்1923-இல் எழுதிய "The Nine Unknown" என்ற நாவலில் தான் முதன் முதலில் இந்த இரகசிய அமைப்பு பற்றிய தகவல் வெளியானது.

உளவியல், உடலியல், நுண்ணுயிரியல், ரசவாதம், தொடர்பு, புவி ஈர்ப்புவிசை, அண்டவியல், ஒளி மற்றும் சமூகவியல் என்ற ஒன்பது விதமான நூல்கள் தான் அவை என்று தல்போட் முண்டி தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். அதை பெரும்பாலானோர் ஏற்றுக்கொண்டும் உள்ளனர்.

முதல் புத்தகம் பிரச்சாரம் மற்றும் உளவியல் போர் நுட்பங்கள் பற்றி பேசுகிறது. அனைத்து விஞ்ஞானங்களிலும் மிகவும் ஆபத்தானது, வெகுஜன கருத்துக்களை உருவாக்குவதே ஆகும், ஏனென்றால் ஒருவர் உலகம் முழுவதையும் ஆளுவதற்கு இது உதவும் என்பது தல்போட் முண்டியின் கருத்து.

இரண்டாவது புத்தகம் உடலியல் பற்றி சொல்கிறது. தியான்சு என்று அழைக்கப்படும் ஒரு வித நுட்பம், தமனியை தொடுவதன் மூலம் எவ்வாறு ஒரு நபரைக் கொல்ல முடியும் என்பதை விளக்குகிறது.

மூன்றாவது புத்தகம் நுண்ணுயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பத்தை பற்றி சொல்கிறது.

நான்காவது புத்தகம் ரசவாதம் மற்றும் உலோகங்களின் இயல்புமாற்றம் பற்றி விளக்குகிறது. பழமரபுக் கதையின் படி, கடுமையான வறட்சி காலத்தின்போது, கோவில்கள் மற்றும் மத நிவாரண அமைப்புகளுக்கு "இரகசிய மூலங்களிலிருந்து" அதிக அளவு தங்கம் கிடைத்துள்ளன.

ஐந்தாவது புத்தகத்தில் பிரபஞ்சத்திற்கு உட்பட்ட தொடர்பு மற்றும் பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்ட தொடர்பு பற்றிய ஆய்வுகள் இருக்கிறது.

ஆறாவது புத்தகம் புவி ஈர்ப்புவிசை பற்றிய இரகசியங்களையும் பண்டைய வேத விமானத்தை செய்யும் உண்மையான வழிமுறையை பற்றிய தகவல்களையும் கொண்டுள்ளது.

ஏழாவது புத்தகம் அண்டவியல் மற்றும் பிரபஞ்சத்தின் ஏனைய விவகாரங்களையும் சொல்கிறது.

எட்டாவது புத்தகம் ஒளியும் அதன் வேகத்தை பற்றியும், மேலும் அதை எப்படி ஒரு ஆயுதமாக பயன்படுத்துவது என்பதை பற்றியும் விளக்கியுள்ளது.

இறுதி புத்தகத்தில் சமூகவியல் பற்றி உள்ளது. இது சமூகங்களின் பரிணாமத்திற்கான விதிகள் மற்றும் அவற்றின் வீழ்ச்சியை முன்னறிவிக்கும் வழிமுறைகளையும் உள்ளடக்கியது.

இந்த நுட்பங்கள் தொடர்பான அறிவு யாவும் பொது மக்களின் கைகளுக்கு போய்விட கூடாது என்று அசோகர் அறிவிர்ச்சிறந்த ஒன்பது பேரிடம் அதை பாதுகாப்பாக ஒப்படைத்தார். அறிவை பாதுகாப்பது மட்டுமல்லாமல், அவரவர் துறைகளில் மேலும் பல ஆராய்ச்சிகள் செய்து அதை வளர்க்கவும், தங்கள் மரணத்துக்கு பிறகு அந்த துறையை வளர்க்க ஒரு சீடரை உருவாக்கவும் ஆணை இடப்பட்டது.


Do you know what this means?

"Now it is conquest by Dhamma that Beloved-of-the-Gods considers to be the best conquest. And it (conquest by Dhamma) has been won here, on the borders, even six hundred yojanas away [i.e.about 1500 miles], where reigns the Greek king named Antiochus, and beyond the realm of that Antiochus in the lands of the four kings named Ptolemy, Antigonus, Magas, and Alexander; and in the south over the Cholas and Pandyas as far as Tamraparni (Ceylon)."

This rock edict was carved on 258 BC.

East India Company belongs to who?

Ashoka sent nine unknown men to different countries, each with a type of advanced knowledge. The history of Ashoka tells us that they possess a lot of things that the world could not understand. This is the secret society created by Ashoka. An English writer, Talbot Mundy, is the first person to write about this secret society in his book, "The Nine Unknown" (1923).

Talbot Mundy provides a list of the nine books which is then generally accepted by many. The list includes Psychology, Physiology, Microbiology, Alchemy, Communication, Gravity, Cosmogony, Light and Sociology.

The first book dealt with techniques of propaganda and psychological warfare. The most dangerous of all sciences is that of molding mass opinion, because it would enable anyone to govern the whole world, according to Mundy.

The second book discussed physiology and explains how to kill a person simply by touching him or her, known as the “the touch of death,” simply by the reversal of a nerve impulse.

The third volume focused on microbiology and biotechnology.

The fourth book dealt with alchemy and transmutation of metals. According to another legend, in times of severe drought, temples and religious relief organizations received large quantities of gold from “a secret source.”

The fifth book contained a study of all means of communication, terrestrial and extraterrestrial.

The sixth book focused on the secrets of gravitation and actual instructions on how to make the ancient Vedic Vimana, (like Vaiminika Shastra on aerospace technology).

The seventh contained cosmogony and matters of the universe.

The eighth book dealt with light including the speed and how to use it as a weapon.

The ninth and final book discussed sociology. It included rules for the evolution of societies and the means of foretelling their decline.

Ashoka handed it over to the nine of the most brilliant minds at the time to avoid those knowledges go to the hands of the public. Besides protecting those knowledges, they should do more research in their respective fields to develop them. They are also ordered to create a disciple to further preserve and develop that knowledges after their death.



Comments
* The email will not be published on the website.
I BUILT MY SITE FOR FREE USING