15 Oct


ஐயப்பனின் பெயர் தர்ம சாஸ்தா

புத்தருக்குரிய பெயர்களில் ஒன்று, பிங்கல நிகண்டில் ‘தருமன்’ என்றும், திவாகரத்திலும் நாமலிங்கானுசாசனத்திலும் ‘தர்மராஜன்’ என்றும் புத்தருக்கு வேறு பெயர் கூறப்பட்டுள்ளது. இது தமிழ் நிகண்டுகளினாலும் அறியப்படும்.

சாத்தன்’, அல்லது ‘சாத்தனார்’ என்னும் பெயர் ‘சாஸ்தா’ என்னும் வடமொழிப் பெயரின் திரிபு. ‘சாஸ்தா’ என்பது புத்தருக்குரியபெயர்களுள் ஒன்று என்பது ‘அமரகோசம்’, ‘நாமலிங்கானுசாசனம்’ முதலிய வடமொழி நிகண்டுகளால் அறியப்படும். எனவே, ‘சாஸ்தா’ என்னும் சொல்லின் திரிபாகிய ‘சாத்தன்’ என்னும் பெயர் புத்தரைக் குறிக்கும் பெயராகப் பண்டைக் காலத்தில் வழங்கப்பட்டுவந்தது. இந்தப் பெயரைப் பௌத்த மதத்தினர் பெரும்பான்மையும் தத்தம் சிறுவருக்குச் சூட்டினர். பண்டைக் காலத்தில், அதாவது கடைச்சங்க காலத்தில், தமிழ் நாட்டிலிருந்த பௌத்தர்கள் ‘சாத்தன்’ என்னும் பெயரைப் பெரும்பாலும் மேற்கொண்டிருந்தனர் என்பது சங்க நூல்களினின்றும் தெரியவருகின்றது.

பௌத்த நூலாகிய ‘மணிமேகலை’யை இயற்றியவர் பௌத்த மதத்தினர் என்பதும், அவரது பெயர் ‘சாத்தனார்’ என்பதும் ஈண்டுக் கருதத்தக்கது.

கோவலன் என்னும் ‘சிலப்பதிகார’க் கதைத் தலைவனுடைய தந்தை ‘மாசாத்துவன்’ என்னும் பௌத்தன் என்பதும், கோவலன் கொலையுண்டபின், மாசாத்துவன் பௌத்த பிக்ஷ¨வாகித் துறவுபூண்டான் என்பதும் ஈண்டு நோக்கற்பாலன. கோவலன் நகரத்தார் செட்டியார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இதற்கும் விளக்கமும் ஆதாரமும் உண்டு!

காவிரிப்பூம்பட்டினத்திலும் சாத்தன் கோயில் இருந்ததாகச் சிலப்பதிகாரத்தினால் தெரிகின்றது. ‘சாஸ்தா’, அல்லது ‘சாத்தன்’ என்னும் வட சொல்லிற்கு நேரான தமிழ்ச்சொல் ‘ஐயன்’, அல்லது ‘ஐயனார்’ என்பது. ‘ஐயன்’ என்பதற்கு உயர்ந்தோன், குரு, ஆசான் என்பன பொருள். (காவிரி பூம்பட்டினத்தில் இருந்து வந்தோம் என வேறு எந்த சமூகமும் சொல்லாத போது நகரத்தார் செட்டிகள் தான் ஆதாரங்களுடன் சொல்கிறார்கள்.)

காஞ்சீபுரத்திலுள்ள காமாட்சியம்மன் கோயிலின் உட்பிராகாரத்தில் இருந்த புத்தர் உருவச் சிலைக்குச் ‘சாஸ்தா’ என்னும் பெயர் உள்ளதுதான். இச்சாஸ்தாவைப்பற்றிக் ‘காமாட்சிலீலாப் பிரபாவம்’ என்னும் காமாக்ஷ விலாசத்தில், ‘காமக்கோட்டப் பிரபாவத்தில்’, ‘தேவியின் (காமாட்சி தேவியின்) தன்யபானஞ் செய்து (முலைப்பால் அருந்தி) சுப்பிரமணியரைப் போலான சாஸ்தா ஆலயம்’ காமாட்சியம்மன் கோயிலில் இருக்கிறதாகக் கூறப்பட்டுள்ளது. ‘சாஸ்தா’ என்பவரும் ‘புத்தர்’ என்பவரும் ஒருவரே என்பதற்கு இதுவே போதுமான ஆதாரம்.

இப்போது சாஸ்தாவுக்கும் செட்டியாருக்கும் உள்ள தொடர்ப்பை பற்றி பேசலாம்.

1) இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் பாதி வணிக கல்வெட்டுகள் அதில் அனைத்திலும் கடல்வணிகர்களை குறிக்க சாத்தன் என்று தான் குறிப்புள்ளது. கடல் வணிகர்கள் யார்? தமிழ்நாட்டில் கப்பல் ஏறி சென்று வணிகம் செய்தவர்கள் செட்டியார்கள் மட்டுமே.

2) சாத்தப்பன் என்ற பெயர் செட்டியார்களுக்கு மட்டுமே பெரிதாக உபயோகப்படுத்தப்படும் பெயர்.

3) சிலப்பதிகார கோவலனின் தந்தை பெயர் மாசாத்துவன் அவன் 1000 கப்பல் வைத்து வணிகம் செய்தான் என்று இருக்கிறது. செட்டியாரை தவிர கப்பல் வணிகம் செய்தது யார்?

4) திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி வட்டம் மங்கலம் என்ற ஊரில் ஒரு பழமையான புத்தர் சிலை இருக்கிறது. அதை அங்குள்ள பிள்ளைமார் சமூகத்தவர்கள் செட்டியாரப்பன் என்று பல நூற்றாண்டு காலமாக குலதெய்வமாக வழிபடுகிறார்கள். பெளத்த சிலையை செட்டியாரப்பன் என சொல்லுவதற்கு என்ன தேவை இருக்கிறது?

5) நாகை மாவட்டத்தில் மூன்று ஊர்கள் புத்தமங்கலம் என்ற பெயரில் உள்ளன. அதில் ஒரு ஊரில் மட்டுமே புத்தர் சிலை உள்ளது. இங்கு தாய்லாந்திலிருந்து மக்கள் மற்றும் பிக்குகளுடன் வந்து மொட்டை அடித்து வணங்கிவிட்டு செல்கிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் புத்தர் இந்தவழியாக சிலோன் சென்றதாக, எங்கள் நாட்டு ஓலைசுவடியில் உள்ளதாக கூறுகிறார், மேலும் ஜப்பான் மற்றும் இலங்கை நாடுகளிருந்தும் பெளத்தர்கள் வந்து செல்கிறார்கள். ஆனால் உள்ளுரில் ஒரு பாட்டி சுவையான தகவலை எங்களுடன் பகிர்ந்துக்கொண்டார். புத்தருக்கு வளையச்செட்டி என்று நாங்கள் கூறுவோம். புத்தர் முன்பு அரசமரத்தடியில் அய்யனார் கோவிலில் இருந்தார் தற்போது தனி மண்டபம் கட்டி வைத்துள்ளார்கள்.

இன்னும் பல 100 ஆதாரங்களை செட்டியார் என்பற்கு தரமுடியும்.

இல்லை என்பவர்கள் அதற்கான ஆதாரங்களை கொடுங்கள். அதை விடுத்து கிண்டல் பதிவுகளை போடுவதை நிறுத்துங்கள்!



Comments
* The email will not be published on the website.
I BUILT MY SITE FOR FREE USING