நீ தமிழனா? சந்திரவழிபாட்டுக்கு திரும்பு!
சந்திரவழிபாடு என்பது ஏதோ பிறையை வணங்குவது அல்ல. முதலில் வழிபாடு என்றால் சூடம் பத்தி காட்டுவது என்ற பிராமண செய்திகளில் இருந்து வெளியே வாருங்கள்.
வழிபாடு என்பது ஒரு பாதையில் தன்னை நடத்தி செல்லுவது. அந்த தமிழர்களின் பாதை தான் என்ன என்பதில் தான் முதல் சிக்கல்.
அதற்கான தீர்வு :
1 - தமிழில் பெயர் இருந்தால் அது நம்முடையது என்ற மொழி போதையில் இருந்து வெளியே வாருங்கள்.
2 - தமிழில் உள்ள காப்பியம், நூல்கள், கல்வெட்டுகள் இவைகள் ஒரு தமிழனால் தமிழில் எழுதப்பட்டாலும் அவர் காலகட்டத்தில் எந்த மதத்தின் தாக்கம் இருந்தது என்பதை நோக்குங்கள்.
3 - முடி (அரச) வரலாறு வேறு குடி (மக்கள்) வரலாறு வேறு என்பதை மனதில் ஏற்று கொள்ளுங்கள்.
4 - கல்வெட்டுகள் முடி அரசர்களின் வரலாறு. அது மக்களின் வாழ்க்கை இல்லை என்பதை ஒத்துகொள்ளுங்கள்.
5 - அரசர்களை இயக்கியது ஒரு சில மதங்கள் தான். அவைகள் தமிழர் வழிபாடான சந்திரனின் அடிப்படை இல்லை, சூரியனின் அடிப்படை மதங்கள் என்பதை ஏற்றுகொள்ளுங்கள். தேடி தெரிந்தும் கொள்ளுங்கள்.
6 - தமிழ்தேசியம் பேசுபவர்கள் ஆளும் வர்க்கத்தை தேர்ந்தெடுக்க 10% வேண்டுமானால் நேரத்தை பணத்தையும் செலவழியுங்கள். 90 % மக்களின் வாழ்வியல் மாற்றத்திற்கு செலவழியுங்கள். ஏனெனில் மக்கள் மாறினால் தலைவன் தானாக மாறுவான்.
7 - பெருங்கோவில் என்பது சூரியவழிபாட்டு தளங்கள் என்பதையும் குலதெய்வ வழிபாடு தான் சந்திரவழிபாடு என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
8 - சூரியவழிபாடு இயற்கைக்கு எதிரானது என்பதையும்
9 - பலி கொடுத்த நம்மிடையே சைவம் வைணம் போன்ற ஊன் உண்ணாமையை பொதுவாக கொண்ட மதங்கள் வழிந்து ஆழ்வார்கள், நாயன்மார்கள் மூலம் பரப்பப்பட்டது என்பதையும் நாம் ஏற்றுகொள்ள வேண்டும்.
இவை எல்லாவற்றையும் நாங்கள் சொல்வதால் ஏற்றுகொள்ளாமல் மக்களின் வாழ்வியலில் இருந்து புரிந்துகொள்ளுங்கள்!
Are you a Tamil? Return to your lunar worship!
Lunar worship here doesn't mean worshiping or praying to the crescent of the Moon. First of all, try to understand that worship doesn't mean showing camphor or incense stick to the God.
But, it means following or proceeding on the way of something. The problem now is to know which is the path of Tamils exactly.
The solutions are :
1 - Come out of the "addiction of pride" that everything with name in Tamil are of ours.
2 - Though the epics, books, inscriptions were written by a Tamil in Tamil language, look at his influence of religion at that given time.
3 - Accept the fact that kings history and people's history are totally different.
4 - Agree that the inscriptions are telling the histories of kings, not people's.
5 - Kings are controlled by some religions and those who spread it. Those religions are not following the lunar phase as of Tamils, but on the basis of solar. Research it to know more.
6 - Those who speak Tamil nationalism, please spend 10% of your money and time for choosing the ruling class. The rest 90% spend on the changeover of people's lives because when the people change, their leader will automatically change himself.
7 - All must know that big temples are solar worshiping sites and family & tutelary deity worship is lunar worship.
8 - Solar worship is against the nature
9 - We must accept the fact that religions with the idea of abstaining from consumption of meat such as Shaivism and Vaishnavism are imposed by Alvars and Nayanmars on Tamil people who make sacrificial offering to their deities.
Try to understand all of these points from the perspective and lives of people, without accepting it directly from us.