06 May


வழிபாடு என்பது ஏதோ கையை கூப்பி சூடம் பத்தி கொளுத்தி கும்பிடுவது அல்ல. இந்த புரிதலுடன் அடுத்தகட்டம் நோக்கி நகர வேண்டும்.

1) சந்திர வழிபாடு

சந்திரனின் பரிமாணங்களான வளர்பிறை, தேய்பிறை, அம்மாவாசை, முழுநிலவு, மேல் நோக்கு நாள், கீழ் நோக்கு நாள், திதிகள் ஆகியவற்றின் மூலம் இந்த உலகில் நிகழும் மாற்றங்களையும் தனது உடலில் நிகழும் மாற்றங்களையும் கணித்து அதற்கேற்ப தனது வாழ்க்கையை அமைத்து வாழுதல் தான் சந்திர வழிபாடு. அதாவது சந்திரனின் வழியே பயணப்படு.

இந்த உலகத்தில் கிட்ட தட்ட 70 % நீர் உள்ளது. முழுநிலவு நாளுக்கும் மறைநிலவு நாளுக்கும் ஒரு விதமான மாற்றங்களை நிலவு அந்த நீரில் ஏற்படுத்துகிறது (கடல் அலைகள்).

அதே போல மனித உடலிலும் 70% நீர். அதனால் அதே மாற்றங்கள் மனித உடலிலும் நிகழும்.

மேலும் நிலவில் ஏற்படும் 27 நாள் சுழற்சி ஒவ்வொரு பெண்ணின் உடலிலும் நடைபெறுகிறது.

இவைகள் எல்லாம் எவ்வாறு நடக்கிறது என அறிந்த பழங்குடிகள் இறந்த உடலின் நினைவலைகளை இந்த நிலவு எப்படி பாதிக்கிறது எனவும் பார்த்தனர்.

அதாவது இங்கே உடலுடன் இருக்கும் சிந்தனை சக்தி புலன் உறுப்புகளால் சிதறுவதை கண்ட பழங்குடிகள் அம்மாவாசை அன்று உடல் இல்லாத இறந்தவர்களின் நினைவலைகள் வீரியம் கொள்ளுவதை கவனித்தனர்.

இறந்த முன்னோர்களை தனக்கு உதவி செய்யும்மாறு குறிப்பிட்ட அதிர்வெண்ணுக்கு உடலை வலைத்து (விரதம் இருந்து, சுத்தமாக இருந்து) அதில் இறக்கி உடல் இல்லாத சிந்தனை ஒருங்கே பெற்ற உயிர்களிடம் அதற்கு தேவையான இரத்ததை கொடுத்து வாக்கு வாங்கி கொண்டான். மேலும் உடல் இல்லாத உயிர் என்பதால் கடந்த காலத்தையும் பார்த்துவர கேட்டான் (இவை எண்ண அலைகள் பற்றி தெரிந்தவர்களுக்கு புரியும்).

அதாவது அவர்களுக்கு வேண்டியதை கொடுத்து தனக்கு தேவையானதை உடன்படிக்கை செய்து கொள்ளுதல் தான் குலதெய்வ வழிபாடு எனப்படும் முன்னோர் வழிபாடு.

2) சூரிய வழிபாடு

எந்த இடத்தில் இருந்தால் சூரியனை சரியாக கணிக்க முடியுமோ, எந்த இடத்தில் சூரிய உச்சத்தை மிக துல்லியமாக அறிய முடியுமோ அங்கே இருந்த ஒரு கூட்டம் தான் இந்த உலகத்தை ஆள துடித்தது. இராசியில் சூரியன் உச்சத்தில் இருப்பவனால் தான் அரச பதவிக்கு வரமுடியும். எந்த நிலத்தில் சூரியன் உச்சத்தை அடைக்கிறதோ அதில் இருக்கிறவனுக்கு தான் உலகத்தை ஒரு குடையின் கீழ் ஆள வேண்டும் என தோன்றும்.

அவ்வாறு சூரியனை நன்கு அறிந்த அந்த கூட்டம் எல்லா மக்களும் இயல்பாக சந்திரனை வெறும் கண்ணால் பார்த்து அதன் நகர்வுகளுக்கு ஏற்ப செயல்களை செய்வது போல தன்னால் செய்ய முடியவில்லை என்பதை அறிந்து அதற்கு ஒரு தொழில்நுட்பத்தை தெரிந்து கொள்கிறார்கள்.

அதாவது, நிலையான முக்கோண வடிவ ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் நிழல்களை பார்த்து சூரியனின் நகர்வுகளை வெறும் கண்ணில் கணித்தல்.

அது தான் உலகம் முழுக்க சொல்லப்படும் :
1) எகிப்து பிரமீடுகள் (பெருமேடுகள் என்பதன் திரிபே)
2) மாயன் பெருமேடுகள்
3) ரோம் நகரின் விழுவன் குச்சிகள்
4) இந்தியாவின் கோபுர கோவில்கள்

அதன் பிறகு சூரியனின் ஒரு தன்மையை புரிந்துகொண்ட அவர்கள் அது இறந்த உடல் விட்ட உயிர்களை கட்டுவதை உணர்ந்துகொண்டனர்.

இதை தனக்கு தேவையான போது எல்லாம் எப்படி பயன்படுத்துவது என தேடியவர்கள் பெண்களின் பூப்புகுருதியும் இந்த சூரியனும் ஒரே தன்மை கொண்டது என்பதை அறிந்தனர்.

இந்த பூப்புகுறுதியை பயன்படுத்த ஆரம்பித்தனர்.
பூப்பு + சாண்டி = பூச்சாண்டி
துமிய குடுக்கி - சாண்டக்குடிக்கி - இயேசுவின் இரத்தம் ஜெயம் போன்றவை இவற்றுடன் தொடர்புடையதே!

உலகம் முழுக்க கண்ணி பெண்ணுக்கு குழந்தை பிறந்ததாகவும் அது அதீத ஆற்றலுடையது என்றும் பல்வேறு கதைகள் உள்ளன.

1) இயேசு
கன்னிக்கு முதலில் பிறக்கும் குழந்தை பூப்புகுறுதி தான். அந்த பூப்புகுறுதி சூரியனுக்கு ஒப்பானது. அது இறந்த முன்னோர் அலைகளை கட்டகூடியது. இந்த அடையாளங்கள் எல்லாமே மரபு வழி கடத்த இந்த கதை பயன்படுகிறது.

(இயேசு - 12 சீடர்கள் | சூரியன் - 12 இராசிகள்)

2) முருகன்
ஒரு பெண் கற்பம் அடையாமல் பிறந்த குழந்தை. அறுகோண முக்கோணம் சின்னம் இது மாந்திரீக அடிப்படையில் உயிர்களை கட்டப்பயன்படும். இந்த முருகனை பற்றி பாடும்போது, இதை கட்டு அதை கட்டு என்றே கந்தசஷ்டி கவசத்தில் பாடப்படும், இதைப் பாடினால் கட்டமுடியாது. ஆனால் இது சூட்சுமமாக கடத்தகூடிய வார்த்தை.

இதே திருமுருகாற்றுப்படையில் முருகு வழிபாடு மலைவாழ் மக்கள் செய்வதாகவும் அதில் சேவலை ஒருவன் வேலில் பலிகொடுத்து இரத்ததை குடித்து குறி சொல்லுவான். அந்த பூசாரியின் பெயர் வேலன் என்றும் உள்ளது இதுவே தமிழர் வழிபாடு.

இந்த சூரிய வழிபாடு செய்யும் கோபுர கோவில்களில் ஒரு இறந்த முன்னோர் அலையை கும்பாபிஷேகம் என்ற பெயரில் கட்டி தனக்கு சாதகமாக வேலை வாங்குவார்கள். அதனால் தான் கும்பாபிஷேகம் முடித்த கோவிலிலோ அருகில் வீட்டிலோ பலிகொடுக்க கூடாது என்பர்.

சந்திர வழிபாட்டில் ஒவ்வொருவனுக்கும் தானே தனக்கு சாதகமாக வழிபாடு செய்துகொள்ள முடியும்.

ஆனால் சூரியவழிபாட்டில் மக்களுக்கு அது தெரியாது. மக்கள் இந்த சூரிய வழிபாட்டு அரசகுடும்பத்தின் ஆட்களை தான் கடவுள் உருவங்களாக வணங்கி கொண்டு இருப்பார்கள். ஆனால் அந்த அரசகுடும்பம் உண்மையான சூரிய வழிபாடு செய்கிறது.

தமிழர்களாகிய பழங்குடிகளும் உலகப் பழங்குடிகளும் கருப்புக்கு (அதாவது இறந்த முன்னோர் அலைகளுக்கு) தேவையான பலியை கொடுத்து தனக்கு தேவையானவற்றை செய்து கொள்கிறோம்.

உலகத்தை ஆளும் அரசகுடும்பம் ஒருவரை கொன்று அதே இடத்தில் பூப்புகுறுதியை வைத்து கட்டி தனக்கு சாதகமாக செயல்பட வைக்கிறது. ஆனால் நீங்களோ இரண்டையுமே செய்யாமல் முட்டாளாக அரசகுடும்த்தானின் உருவங்களை உங்கள் நாட்டுபுற கதைகளுடன் சேர்த்து சொன்ன ஒரே காரணத்திற்காக அவனது சிலையை கழுவி குடித்து அவனது காலில் விழுந்து வருகிறீர்கள்.

1- "கும்பாபிஷேகம் நடக்கும் போதும் பருந்து சுத்துது, ஒருவர் இறந்தாலும் பருந்து சுத்துது. இரண்டுக்கும் செய்யுற சடங்கு ஒரே மாதிரி இருக்கு?"

2- "இறந்த உடலையும் மூனு முறை சுத்தி வரோம், கருவறையையும் மூனுமுறை சுத்தி வரோம்?"

3- "ஏன் (குறிப்பாக கோபுர கோயில்களில்) பலிகொடுக்க கூடாதுனு சொல்லுரான்?"

இப்படி எந்த கேள்வியுமே கேட்காமல் வணங்கி வரும் அடிமை கூட்டமாக மாறிபோய் விட்டாயே.

உன் குலதெய்வங்களாகிய உனது முன்னோர் உனது பலிக்காக காத்து இருக்கிறார்கள். திரும்பு உன் பாதைக்கு. இன்னும் நான் பெருமைகளுடன் உண்டான பிழைப்புகளுக்காக தான் வாழ்வேன் என்றால் உன் அழிவை தடுக்கமுடியாது.

இதை எல்லாம் நீ அறிந்துகொள்ள கூடாது என்பதற்காக தான் அத்தனை மதப்பிரச்சாரங்கள்!

ஆதியில் இருந்து, ஆசீவகம் - சமணம் - அருகம் - பெளத்தம் - சைவம் - வைணவம் என இந்த குலதெய்வ வழிபாடுக்கு எதிராக சைவ கருத்தியலை பரப்ப முனைந்த அத்தனை கருத்தியலையும் உடைத்து தற்போது வரை இதை கடத்தி வந்து எங்கள் தலைமுறைக்கு சேர்த்த எங்கள் இன முன்னோர்களுக்கு நான் அடிபணிந்து வணங்குகிறோம்.

இப்போதும் இதை திசை திருப்ப (சிறுதெய்வம் - காவல்தெய்வம் - துணை தெய்வம் - கோபுரகோவில் என்பது வளர்ச்சி) என என்னென்னமோ சொல்லுவான். ஏன் ஒருவன் கருப்பை ராமனின் மகன் என்றான். குலதெய்வம் பயத்தின் வெளிபாடு என்றான்.

நீங்கள் எப்படி? உங்கள் முன்னோர் காப்பாற்றி வந்து கையளித்து போன எதிரிக்கு எதிரான ஆயுதத்தை எடுக்க போகிறீர்களா? இல்லை அரச குடும்பத்தின் உறுப்பினர் உருவங்களை கழுவிக் குடிக்க போகிறீர்களா?

தமிழர் பெருமைகள் தான் கோபுரகோவில் என்போர் தனித்து செல்லுங்கள். உங்களது முன்னோர்களே உங்களை காறி உமிழ்வார்கள். நீங்கள் வீழ்வதை எங்கள் கண்கள் பார்க்கும்!




Worship (Valipadu in Tamil) here doesn't mean put your hands together or showing camphor and incense stick to the God. We should move on to the next step with this understanding.

1) Lunar Worship

We can describe that lunar worship is to set our life according to the observations made by predicting the changes occurring in Earth based on the phases of Moon such as waxing moon, waning moon, new moon, full moon, "Mel Nokku Naal" (during when we carry out a task over the earth based on the positions of Sun and Moon), "Keel Nokku Naal" (during when we carry out a task under the earth based on the positions of Sun and Moon), Tithi and the changes occurring in our body. That means, following the way of Moon.

This Earth is made up of roughly 70% of water. Moon will cause a kind of changes in the water during either full moon or new moon. (Sea waves)

Similarly, our body also consists of 70% of water. So the same kind of changes would occur inside our body too.

Moreover, the 27 day-cycle, which occurs in the Moon, is also occurs in a woman's body.

The aboriginal people who have observed all these things and realize how it works, also have discovered how the Moon affects the memory waves of dead.

They realized that memory waves of the dead would be very vibrant during new moon day, same like how it affects the memory waves of the living.

Hence, they did all the necessary things like fasting and keeping the body clean before invite their ancestor to get into his body by offering blood (sacrificial offering) to the memory waves of their ancestors which is living without a body and received oracular messages from them because they are aware of past, present and future. (Those who knew about frequency of brain waves could understand this well)

To put it simply, ancestor worship is where we make a deal with our ancestors by giving them what they needed and we received what we wanted from them.

2) Solar Worship

The group which desired to rule this world, is from the place where they can predict every changes and peak point of the Sun precisely. The person who lived in a place where the Sun would reaches its' peak, is the one who will be thinking of controlling this entire world under one rule. Those who thrones as the kings must have their zodiac sign possess all the power of the Sun.

So, this group has realized the power of Sun which they could possibly obtain but their only obstacle is that they cannot observe the Sun in naked eyes and predict its changes. Meanwhile, the aboriginal people could easily predict the changes of Moon by just looking at it with naked eyes. So, the group needed a technology which could assist them to observe the changes of the Sun.

They came up with an idea of building a stationary triangular structure or building to observe the movement of Sun with naked eyes.

Here are such structures all over the world :
1) Egyptian Pyramids
2) Mayan Pyramids
3) Roman Obelisks
4) Indian Temples with Goburam

They began to realize another nature of the Sun. Thus, they learned that it can be used to bind the spirit of the dead.

While thinking of a way to use it for their own gain, they found out that menstrual blood of a girl and the Sun have a common nature.

They started to use this menstrual blood thereafter.
Puppu + Chandi = Pucchandi
Thumiya Kudki, Chanda Kuduki, Blood of Jesus are all of the same concept.

There are various stories around the whole world about virgin girls giving birth to a baby which would possess some great powers.

1) Jesus
Menstrual blood is what considered as the first baby of a virgin girl. The menstrual blood's power is equal to the Sun. It could bind the spirit of the dead. So, all those stories are just to inherit this message to their generations.

(Jesus - 12 Disciples | Sun - 12 Zodiac signs)

2) Murugan
The child born to a woman without pregnancy. The hexagram symbol is used in witchcraft activities to bind the spirit of the dead. A line in Kanda Shashti Kavacham, will sing about "kattu" (bind), but one could not bind the spirits just by reciting this line. But it is a technique of message delivering in a subtle approach.

But the Tirumurukarruppatai has recorded that the aboriginal people of hills practiced the Murugu worship, in which the oracle (known as Velan) will give sacrificial offering of a rooster and drink its blood to give some oracular messages. This is the actual worship of Tamil people.

But in the temple with goburam or sun-worshiping sites, they will bind the spirit of the dead to work for them instead. This is done during the time of Kumbhabhishekham and that is why they prohibit anyone to give sacrificial offering at or around the temple.

In Lunar worship, people can worship in favor of themselves with their knowledge.

But in solar worship, people could do the same. They will assume and keep worshiping the idols of the royal family members as Gods. But the original royal family is practicing the correct way of solar worship.

We, the aboriginal Tamil people and all the aboriginal people around the world are giving sacrificial offering to the "Karuppu" (memory waves of the dead) and received what we want from them in return.

The royal family which is ruling the world, would kill someone and use the menstrual blood to tie the spirit at the same place, and use it for their own gain. But our people have knowledge about these things, going to temple for worshiping the idols of that royal family members, just because our folk stories telling about the idols.

1 - "Why a hawk flying over the temple during the Kumbhabhishekham and over a dead body too? Why both the rituals are similar?"

2 - "Why we circling the dead body and the sanctum of a temple thrice?"

3 - "Why they forbidden us (especially in the temples with gopuram) to give sacrificial offering?"

We have never raised such questions and became like slaves, just going to temple and pray the god inside there.

Your ancestors, who are your family deities as well, are waiting for your sacrificial offerings. Go back to your original path. No one can stop your extinction if you just want to live by bragging about the prides.

All the religious propaganda are to divert or prevent you from knowing all these truths.

We really want to bow down to our ancestors, who persevered and kept alive our original traditions against all the religions that came here with the ideology of forbidden the sacrificial offering, thus put an end to our ancestor worship.

Even now, they are trying to distract us by saying the big temples are actually the evolution of our ancestor worship and so on. Someone has even said that Karuppu Sami is the son of Rama. And, the other one said ancestor worship is an exposure of our fear.

So how about you? Are you going to take up weapon against the enemy which is handed over to us by our ancestors? Or, just want to wash and drink those idols of the royal family inside the temple?

Those who are claiming that the temples are Tamil's pride, please go away. Your ancestors will be ashamed of you. We'll see your fall soon!



Comments
* The email will not be published on the website.
I BUILT MY SITE FOR FREE USING