சாதவாகனர்கள்
இந்திய ஒன்றியத்தின் அதிகாரப்பூர்வ நாள்காட்டியாக இருப்பது சாலிவாகன நாள்காட்டியாகும். இதன்படி சித்திரை ஒன்றாம் நாள் தான் புத்தாண்டு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
சாலிவாகனன் என்றால் யார்? இந்த நாள்காட்டியை உருவாக்கியவனா? இவனது பூர்வீகம் என்ன?
நமக்குச் சொல்லப்பட்ட இந்திய வரலாற்றில் பல அரசகுடும்பங்களைப் பற்றிய செய்திகள் உள்ளன. சேர, சோழ, பாண்டியர்கள், மௌரியர்கள், நந்தர்கள், ஓய்சாளர்கள், மராட்டியர்கள், ராசபுத்திரர்கள் போன்றரோரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால் இந்திய வரலாறு என்று சொல்லப்பட்டதில் ஒரு அரசகுலத்தை மட்டும் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்துள்ளனர். அது "ஆந்திர சாதவாகன" அரசகுலமாகும்.
இவர்கள் கி.மு இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி இரண்டாம் நூற்றாண்டு வரை ஆந்திர அமராவதியைத் தலைநகராகக் கொண்டு தக்காணப் பகுதி முழுவதையும் ஆண்டதாகவும், சில அரசர்களின் பெயர்களும் கிடைத்துள்ளன. ஆனால் இவர்கள் என்ன ஆனார்கள், இன்று இவர்களது வாரிசுகள் உள்ளார்களா என்று எந்தவிதச் செய்தியும் இல்லை.
அது எப்படி ஒரு அரசகுலம் திடீர் என்று காணாமல் போகும்? தன்னைத் தானே மறைத்துக் கொண்டால் ஒழிய அது சாத்தியம் ஆகாது!
சாதவாகனர்கள் என்றால் சாத்துவணிகர்கள் என்று பொருள். வணிகம் மட்டுமே இவர்களது குலத்தொழில். இந்த அரச குடும்பம் தான் சாத்தன்/சாத்தான்/சைத்தான் என்று உலகெங்கிலும் அழைக்கப்படுகிறது.
சாதவாகன அரசர்களின் முத்திரையாக பாய்மரக் கப்பல் இருந்துள்ளது. இவர்கள் உலகம் முழுவதும் கடல் வணிகம் செய்த்துள்ளனர். கடல் சாத்தனுக்கு கப்பலும், நிலச் சாத்தனுக்கு குதிரையும் சின்னங்களாக இருந்துள்ளன. சென்ற நாடுகளில் எல்லாம் மக்களைச் சுரண்டிக் கொழுத்து ஒரு கட்டத்தில் அம்மக்களாலேயே அடித்து விரட்டப்பட்டும் உள்ளனர். பல பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ள இவர்களை எதிரி என்று அம்மக்கள் பதிவும் செய்துள்ளனர்.
மேற்குலகம் இவர்களை சாத்தான் என்கிறது. அரேபியர்கள் இவர்களை சைத்தான் என்கிறார்கள். அரேபிய மக்களைத் துன்புருத்திய சாதவாகன அரசகுடும்பத்தை விரட்டியடித்த முகமது நபியவர்கள் சாத்தனை/சைத்தானைக் கண்டால் கல்லால் அடித்துக்கொல்ல வேண்டும் என்று அம்மக்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த சாதவாகனர்கள் மாபெரும் வணிகர்கள் ஆவர். இந்தியாவின் நிலவழி வணிகப் பாதையும் உலகின் கடல் வழிப்பாதையும் இவர்களின் கட்டுபாட்டில் தான் என்றும் இருந்துள்ளது.
கிழக்கு இந்திய வணிக நிறுவனம் இவர்களின் நிறுவனம் தான். இந்த உண்மையை தமிழர்கள் மோப்பம் பிடித்துவிடக்கூடாது என்று தான் சாதவாகனர்களின் தடயங்களை ஆங்கிலேயர்கள் அழிக்க முயன்றனர். சாதவாகனர்களின் வரலாற்றை திட்டமிட்டே இருட்டடிப்பு செய்ய முயன்ற ஆங்கிலேயர்கள் இவர்களின் கல்வெட்டுக்களை யாரோ ஒரு மௌரிய அரசன் அசோகனின் கல்வெட்டுக்கள் என்று பொய்க்கதை கட்டியுள்ளனர்.
முதலில் அக்கல்வெட்டுக்களில் அசோகன் என்ற பெயரே இல்லை! மேலும் தனது நாட்டின் தெற்கில் சேர, சோழ, பாண்டியர் என்ற மூன்று நாடுகள் உள்ளதாகவும் ஒரு அசோகன் பதிவு செய்தது போல ஒரு கல்வெட்டு கூறுகிறது என்று ஆங்கிலேயர்கள் கதைகட்டினார்கள்.
அசோகனின் மௌரிய நாட்டுக்குத் தெற்கே கலிங்கம் தான் இருந்ததே தவிர தமிழகம் இருந்ததில்லை. ஆனால் சாதவாகனர்களின் ஆந்திர நாட்டுக்குத் தெற்கே தான் தமிழக மூவேந்தர்கள் ஆண்டார்கள்.
இது ஒன்றே போதும், அக்கல்வெட்டு அசோகனுடையது அல்ல, ஆந்திர சாதவாகனர்களுடையது என்று உறுதிப்படுத்த.
(அடுத்த பதிவில் தொடரும்..)
Satavahanas
The official calendar using by Indian Union is of the emperor of ancient India, Shalivahana. Chaitra is the first month and marked as new year, according to this calendar.
But who is Shalivahana? Is he invented the calendar? What's his origin?
There are reports of several royal families in India's history, as we knew. We would have heard about Chera, Chola, Pandyan, Mauryan, Nanda, Hoysala, Maratha, Rajput.
But there's a royal family which had been deliberately hidden from the history. They are "Andhra Satavahanas".
They have been ruling from 2nd century BC to 2nd century AD with Amaravati of Andhra Pradesh as their capital city. We've got few names of the kings belonging to the dynasty. But there are no news of what happened to them and their descendants thereafter.
How it's possible for a royal family to disappear just like that? It will not be possible unless they deliberately hides themselves!
Satavahanas are the caravan of traders. Trading is their family profession. They are the one who have been labeled as Saattan, Satan, Shaitan all over the world.
Sailing ship is the symbol of Satavahanas. They've involved in trading all over the world through sea. Sea traders have ships as their symbol meanwhile land traders have horse as their symbol. They have exploited all the countries they went, and they also have been chased away by people of the land at one point. The people has labeled the traders as enemies who caused damages for the people.
Western world called them as Satan and Arabs called them as Shaitan. Muhammad, who chased away the Satavahana trade family because troubling the people of the Arab, had ordered the people to throw stones at the Shaitans, if they encounter them.
Satavahanas are great traders by nature. India's land trade route and the world's marine route have always been in their control.
East India Company is their company as well. The British tried to destroy the all clues of the Satavahanas so that the Tamils should not able to discover this truth. The British also rewrite the history with falsehood as all the inscriptions previously belong to Satavahanas are changed to the belonging of Ashoka, a Maurya king.
First of all, there's no such name as Ashoka in those inscriptions. The British also claimed that, in one of the inscription, Ashoka wrote about the three regions (Chera, Chola and Pandyan) which reside at south of his Mauryan empire.
It's the region of Kalinga which is originally resided at south of his Mauryan empire, not Tamil land. Chera, Chola and Pandyan regions are actually resides to the south Satavahanas' Andhra region.
This single point is enough to prove that the inscription is not Ashoka's, but Satavahanas'.
(To be continue in next post..)