11 Mar


நாம் அனைவரும் ஆளுபவர்களால் இயக்கப்படுகிறோம் என்பதை உணர்ந்தவன் தன்னை அடிமை என்று ஒத்துக்கொள்கிறான், அவன் மட்டுமே தனக்கு என்ன தேவை என்பதை தேடத்தொடங்குகிறான்.

எப்படி நாம் இயக்கப்படுகிறோம் என்று புரியாத அளவிற்கு உங்களுக்கு அதுவும் வாழ்க்கைக்கு தேவையில்லாத விசயங்களை பெருமை பேசி போதை ஏற்றுகிறார்கள், இந்த போதைகளுக்கு அடிமையாகமால் பயணிப்பவர்களுக்கு ஏளனமே மிஞ்சுகிறது.

சரி ஒவ்வொரு போதைகளை (பெருமைகளை) பார்ககலாம்!


சாதி

எல்லோரும் அறிந்ததே இந்த சாதிப்பெருமை, ஆண்ட பரம்பரை, நாங்கள்தான் இங்கு அனைத்தையும் உருவாக்கினோம் என்று பெருமை பேசினால் ஏனைய சாதி மக்களிடம் வெறுப்பைதான் சம்பாதிக்க முடியும். சாதி என்பது அடையாளம் அது உனது குடும்ப வரலாற்றை அறிவதற்கு உள்ள ஊடகம். இப்படி அடித்துக்கொள்வதனால் 3 ஆம் மனிதன் உள்ளே நுழைகிறான்!


மதம்

நன்றாக பாருங்கள் இங்கே ஏறத்தாழ பாதி விடயங்கள் இந்த மதங்களை பற்றியே நடக்கின்றன. இந்த மதங்கள் மக்களை நல்வழிபடுத்த ஆரம்பித்திருந்தால் (உருவாக்கப்பட்டதுதான், அதுவும் ஒவ்வொரு மத்ததிற்கு முலகாரணமாக இருந்தவர்களால் உருவாக்கப்படவில்லை) ஏன் இவ்வளவு விவாதங்கள்? விவாதப்பொருளாக இருக்கும் ஒரு விடயம் எப்படி சரியாக இருக்க முடியும்? இந்த மாதிரி விடயங்களை பேசாத மனிதர்களே இல்லை! உன் மதம் சரியாக இருந்திருந்தால் அதை உணர்ந்திருந்தால் விவாதம் தேவையில்லை என்று கடந்து போகமுடியும். மொத்ததில் இந்த மதங்கள் நம்மை நல்வழிபடுத்தல்ல மக்கள் அடித்துக்கொள்வதற்காக அரைகுறையாக வடிவமைக்கப்பட்ட கோட்பாடுகள். இந்த மதங்களை உருவாக்கியவனை தேடுவதே கிடையாது!


இந்தியம்


இந்தியம் என்ற மாயை, இங்கே இந்தியா/பாரதம் என்ற அமைப்பே ஆங்கிலேயர்கள் எளிதாக ஆளுவதற்கு கட்டமைக்கப்பற்ற ஒன்று. அது சுதந்திரத்துக்கு பிறகு வெளியிலிருந்து ஆளவேண்டும் என்பதே நோக்கம். இந்திய ஒன்றியத்தில் நிறைய இனவழி (மொழிவழி) இருக்கின்றன அவற்றின் உரிமைகளை பரிக்காமல் கூட்டாட்சி தத்துவம் என்று ஒன்று உள்ளது. அதை பெயரளவில் வைத்துவிட்டு ஒற்றை ஆட்சி அமைக்க முயல்கிறார்கள். இதற்காகவே ஒவ்வொரு இனத்தினை அவரவர் நிலத்திலிருந்து பிரிக்கிறார்கள் அப்போதுதான் உன் நிலத்திற்காக போராட மாட்டாய். இப்போது நிலத்தை விட்டு வேறு இனமக்களின் நிலத்தில் வாழும்போது உனக்கு ஒரு பாதுகாப்பு தேவைப்படுகிறது அதுதான் இந்தியம், இங்குதான் உன் முதலில் உன் அடையாளத்தை அழிக்கிறார்கள்! இதில் நிலத்தை விட்டு வராமலே இருக்கிறவனையும் பெருமை பேசி ஆட்கொள்ளுகிறார்கள். பெரும்பாலும் பூர்விகத்தை (இன பண்பாட்டை) இழந்தவர்களின் ஆயுதம் தேசப்பற்று! இதைமாதிரி மண்ணிற்கு சம்பந்தமில்லாத கோட்பாடுகள் பெருமைகளாக பேசப்படுகின்றன!


இராணுவம்

இராணுவம் என்ற கட்டமைப்பு மக்களை காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது என்று சொல்வார்கள் ஆனால் அதற்கானது அல்ல என்பது வரலாற்றில் என்னென்ன காரணத்திற்காக போர்கள் நடந்தன என்பதை அறிந்தவர்களுக்கு புரியும். இந்த இராணுவ அமைப்பு வணிக எல்லைகளை நிர்ணயிப்பது தேவையெனில் வணிக எல்லை விரிவாக்கம். அப்படி மக்களுக்கானது என்றால் அதில் வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டும். இது எந்த நாட்டிலும் கடைபிடிப்பதில்லை அது எந்த வகையான நாடாக இருந்தாலும். இதில் மிகப்பெரிய வணிக சந்தை. இந்திய பட்ஜெட்டில் 16% இராணுவத்திற்கு ஒதுக்கப்படுகிறது ஆனால் 700+ மீனவர்கள் இலங்கை இராணுவம் கொன்றிருக்கிறது அதை நிப்பாட்ட முடியவில்லை. ஆனால் பெருமை பேசுவதற்கென்றே (தினிப்பதற்கு) மட்டும் வேலைகள் நடக்கின்றன. நமது செலவில் 6 இல் 1 பங்கு ஆனால் நமக்கு பயனில்லை என்ற விவாதங்கூட வைக்கமுடியாத அளவிற்கு நம்மை தேச விரோதிகளாக காமிக்கும் பெருமை பேசுபவர்கள்.


தமிழன்

இத்த பெருமை கடந்த நூற்றாண்டு காலமாக கையாளப்படுகிறது இந்த மண்ணில், பெருமை பேச வைத்து ஆள்பவன் தமிழனே இல்லை, சரி இவ்வளவு பெருமை பேசுகிறார்களே என்று எப்படி தமிழன் வாழ்வியலை தேடினால் இந்த பெருமைகளாக பேசப்படுபவைகள் அனைத்துமே ஒரு காலத்தில் இங்கு இருந்த மக்களை மோசமாக வைத்திருந்ததின் சுவடுகள், அதையே இப்போது பெருமையாக பேசி அடிமைபடுத்துகிறார்கள். அவ்வளவுதான் தமிழ் தேசியம் பேசுகிறவர்கள் செய்வது.


தமிழ்மொழி

இந்த மொழியை வைத்து எவ்வளவு விடயங்கள் அரங்கேறியிருக்கன, அரங்கேறி கொண்டு இருக்கின்றன! ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் 150 வருடமாகத்தான் எழுத்தறிவு அனைத்து மக்களையும் சென்றடைந்தது. அப்ப நமக்கு கிடைத்த அத்தனை வரலாற்று ஆவணங்களும் ஒரு குறிப்பிட்ட குழுக்கள் மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள் அல்லது மேலடுக்கில் உள்ள மக்கள் மட்டும். இதை வைத்துக்கொண்டு அனைத்தை மக்களின் வாழ்வியலை விளக்கிவிடமுடியுமா, முடியாது என்பதே நிதர்சனமான உண்மை! இதில் வேறு சான்ஸ்கிரிட்டிலிருந்து வந்தது தமிழ் என்றும் இல்லை தமிழிலிருந்து வந்தது சான்ஸ்கிரிட் என்ற விவாதங்கள்! அதைவிட பெரிய விடயம் என்னவெனில் பாலி மொழியிலிருந்துதான் தமிழும் மற்றும் சான்ஸ்கிரிட் வந்தது என்ற பெருமைகள். இந்த பெருமைகளால் ஏற்படும் அனைத்து பிரச்னைகளும் ஆளுபவனுக்கு சாதகமே! இரண்டே இரண்டு விடயங்கள் வரலாறு வென்றவனால் எழுதப்பட்டது, மேலும் அதிகமாக மதம் சம்பந்தப்பட்ட நூல்களே கடத்திவரப்பட்டிருக்கின்றன. இந்த பெருமைகளுக்கும் சாதாரண குடிகளுக்கும் எந்த சம்பந்தமில்லை இருந்தாலும் பெருமை பேச வைக்கப்பபடுகிறார்கள்.


சினிமா

கலை பார்தது ரசிக்கலாம் மற்றும் கருத்துகளை பரப்புவதற்காகவே இதுகாறும் பயன்படுத்தப்பட்டது இப்போது அதுவும் அளவுக்குமீறி அதில் வரும் நாயகர்களே நம்மை காப்பாற்றுவார்கள் என்ற பிரம்மையை மக்களிடம் விதைத்து விவாதம் செய்ய வைக்கிறார்கள். இதுவும் தமிழ்நாட்டு அரசியலில் 50 வருடத்திற்குமேல் ஆட்கொண்டுள்ளது. இப்ப மக்களின் போராட்டங்களை பற்றி அறியாதவர்கள்கூட சினிமா புகழ் இருந்தால் போதும் கட்சி ஆரம்பித்துவிடலாம் என்கிற நம்பிக்கை. தமிழ்நாட்டில் இப்போது அதிகமாக ஊடகங்களில் விவாதிப்படுவதே இந்த சினிமாவும் சினிமா சம்பந்தபட்ட அரசியல்களும். இந்த சினிமாவினால் எவ்வளவு நாட்டு புற கலைகள் அழிந்தன அழிந்து கொண்டு இலுக்கின்றன! இந்த நாட்டுபுற கலைகள் நமது பண்பாட்டை எப்படி கடத்தி வந்தன!


விளையாட்டு (கிரிக்கெட்)

இங்கு விளையாட்டு என்றாலே கிரிக்கெட் என்று மனதில் பதியவைத்துவிட்டார்கள். மற்ற விளையாட்டுகளை இந்த விளையாட்டு எப்படி சிதைத்தது இது ஒரு மோசமான விளையாட்டு ஆனால் சிறப்பான விளையாட்டுகளை இந்த மண்ணிலிருந்து அகற்றுகிறது. கிரிக்கெட் பற்றி தெரியவில்லையெனில் அதுஅவமானம். தனியார் நிறுவனமாக இயங்கும் கிரிக்கெட்டை இந்திய ஒன்றியத்தின் அடையாளமாக பார்ககவைக்கப்பட்டு, அதைபற்றி பேசுவதே பெரிய பெருமையாக நினைப்பது! கவனியுங்கள் இளைஞர்கள், அலுவலக இடைவேளை நேரங்களில் பொதுவான விவாதமாக கிரிக்கெட் இருக்கிறது.


அரசியல்

இது அனைத்தையும் இயக்கமுடியுமென்ற போதை , அரசியலின் அடிப்படை தத்துவத்திற்கு எதிராக பயணிக்கிறது. மக்கள் தனக்கு என்ன தேவை என்பதை உணர்த்த வேண்டும், அரசியல்வாதிகள் அவற்றை உள்வாங்கி செயல்படவேண்டும் இங்கு அப்படியாக நடக்கிறது அரசியல்வாதி விடுக்கும் அறிக்கைகளை வைத்து மக்கள் விவாதிக்கிறார்கள் நேர் எதிர் மறையாக செயல்படுகிறார்கள். தலைவனை விமர்சனம் செய்தவனிடம் சண்டைக்கு போவது அதில் உண்மையோ அல்லது பொய்யோ அதைபற்றி கவலை இல்லை. அரசியல் சாக்கடை என்று போகாதவனும் இருக்கிறான் தலைவனுக்காக தற்கொலை செய்கிறவனும் இருக்கிறான். ஆனால் மக்களுக்கான அரசியல் இல்லை! இதில் அரசியல் கோட்பாடு, கொள்கை, தலைவர்கள் என்ற பெருமைகளே பேசப்படுகிறது நடைமுறைபடுத்துவது கிடையாது!


வளர்ச்சி

இந்த பெருமை போதைதான் இப்போது ஆளும் வர்ககத்தின் மந்திரம்! வளர்ச்சி என்பது வளத்தை கொள்ளையடிப்பதின் வணிகச்சொல் அவ்வளவே. பெருந்திரள் உற்பத்தி (mass production) என்பது இயற்கைக்கு எதிரானது. அது மருதநில நெல் உற்பத்தியானாலும் சரி, மகிழுந்து (கார்) உற்பத்தியானாலும் சரிஇரண்டும் வளச்சுரண்டல்களே! வளர்ச்சி என்ற பெயரில் அனைத்தும் வணிகமயமாக்குவதில் மொத்த சுதந்திரமும் பறி போகிறது என்பதை அறியாமலே பெருமை பேசுவது!


கல்வி

இது அனைத்து குடும்பங்களையும் சென்றடைந்த ஒன்று! தன் குழந்தை ஆங்கிலம் பேசினால் பெருமையென்றும், அலுவலகத்தில் உட்கார்ந்து செய்யும் வேலையை இந்த கல்வியினால் கிடைத்த பெருமிதம். படிப்பு என்கிற பெயரில் மதிப்பெண்களின் பெருமைகள் வேறு (மனப்பாடத்தினை பெருமையாக நினைப்பது). இதில் வெளிநாடுகளில் முக்கிய நிறுவனங்களில் வேலை செய்பவரில் இவ்வளவு பேர் இங்கு படித்தவர்கள் என்பது கூட ஒரு பெருமிதம் என்று நினைப்பது. இங்குள்ள வளத்தை பயன்படுத்தி படித்துவிட்டு இந்த மண்ணிற்கு உழைக்கமாட்டேன் என்று வெளிநாட்ட்டில் வாழும் அடிமை வாழ்ககைக்கு புகழாரம் சூட்டுவது!


இவையில்லாமல் இன்னும் நிறைய பெருமை போதைகள் இருக்கலாம் அவற்றை நான் இன்னும் அறியவில்லை என்று கொள்ளலாம்.

இந்தப் போதைகளில் மதம், சாதி மற்றும் இராணுவ போதைகளைத் தவிர்தது அனைத்திலும் பெருமை பேசி இருந்தவனில் நானும் ஒருவன்தான், கடைசியில் நாம் எங்கு வீழ்ந்தோம் என்று தேடினால் இந்தப் பெருமைகளினால் பலன் அடைபவர்கள் வணிகத்தைச் சார்நதவர்களே! ஆனால் இந்த வணிகத்தை எதிர்பபதில் ஒரு சிலரே, அவர்களிலும் அதற்கு எதிராக வணிகத்தையே எடுப்பது மிகவும் கேள்விக்குரியானது! இவ்வளவு காலம் இவ்வளவு விசயங்களை வைத்து நம்மை திசைத்திருப்பியவன் நம்மை மாதிரி எத்தனை வணிகத்தை கையில் எடுப்பவர்களை பார்ததிருப்பான்!

இதில் நாம் சார்ந்து இருக்கவேண்டியது இயற்கையையே! ஆனால் அப்படி இயற்கையை பற்றி பேசினால் ஏளனம் பேசி அவர்களை அழிப்பது இல்லையெனில் வாழும் காலத்தைவிட்டு அவர் மறைந்தபிறகு அவரது பெருமைகளை பேசுவது. சிறந்த எடுத்துக்காட்டு நம்மாழ்வார்! நிகழ்கால அரசியல் தலைவர் நல்லக்கண்ணு ஆனால் அவரை இதுவரை எவ்வளவு உயரத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம்? இன்னும் நிறையபேர் கத்திக்கொண்டும், போராடிக்கொண்டும் தான் இருக்கிறார்கள். அவர்களை நமக்கு தெரிவதேயில்லை!

இதில் அடுத்த அறிவார்ந்த கேள்வியெனில் வணிகமில்லாமல் வாழ முடியுமா என்று! கொஞ்சம் 100 ஆண்டுகள் பின்னோக்கி போய் பாருங்கள், கிராமங்களில் எப்படி தற்சார்பாக வாழ்ந்தார்கள் என்று. ஏன் இன்னமும் அதே மாதிரி கிராமங்கள் நிறைய இருக்கின்றன. சுரண்டல்கள் அப்போதும் இருந்தன ஆனாலும் தற்சார்பு நிலை இருந்தது!

நாகரீகம் வணிக அடிமைத்தனம் என்றும் தற்சார்பை சுதந்திரம் என்றும் அறியாதவரை இங்கு எதுவும் நிகழப்போவதில்லை!

இவ்வளவு பெருமை போதையிலும் (வணிக அடிமையாக) ஆட்பட்டவனை மீட்டெடுக்கலாம் என பார்த்தால் இதில் ஏதாவது ஒரு பெருமையில் முழுமையாக ஊறிக்கிடக்கிறான்!

இந்தப் பெருமை போதையின் தாக்கத்தை ஒவ்வொன்றாக உடைப்பவர்கள் கூட பல பிரச்சனையை நம் மக்களிடமிருந்தே எதிர்க்கொள்கிறார்கள் உண்மையை சிந்திக்காமல்!

காலம் என்னையும் முழு அடிமையாக்குமா அல்லது இந்த தற்சார்பு சிந்தனையுள்ளவர்களால் ஒன்று சேர்ந்து மீட்கப்படுமா?

நன்றி : தற்சார்பு வாழ்வியல்

தற்சார்புக்கு திரும்புவோம்!

Comments
* The email will not be published on the website.
I BUILT MY SITE FOR FREE USING