முதலில் இதற்கு முன் நடத்தப்பட்ட திட்டமிட்ட ஒரு செயலின் தொடர்விளைவு தான் இப்போதுள்ள தமிழ்நாட்டின் கோரநிலை என்பதை உணர வேண்டும்.
1800 களில் ஒரு ஆங்கிலேயே ஆராய்ச்சியாளரை இங்கே ஆய்வுக்காக வரவைத்து, இந்தியாவில் இருக்கும் புவியியல் சூழல்பற்றி முழு தகவல்களையும் திரட்ட வைத்து, ஒரு திட்டத்தை தீட்டியது இரண்டு சிங்க சின்னம் கொண்ட கிழக்கிந்திய கம்பெனி.
அவர்கள் கற்பனை குரலாக:
"மேற்கு தொடர்ச்சி மலை தான் தென்னிந்திய மக்களின் வாழ்க்கை தற்சார்பாக இருக்க காரணம். இவர்களை புதிய ஒற்றை உலக கொள்கைக்கு உடன்பட வைக்க இவர்களை நிலத்தில் இருந்து வெளியேற்றி நகரங்களுக்குள் வேலை செய்ய வைக்க வேண்டும். அப்படியெனில் இந்த மலை தான் மழையை அருவடை செய்கிறது."
"பத்ரா, பீமா, சாலக்குடி, சித்தாறு, கோதாவரி, கபினி, காளி, கல்லாயி, காவிரி, கோய்னா, கிருஷ்ணா, குண்டலி, மகாபலேஷ்வர், மலபிரபா, மணிமுத்தாறு, நேத்ராவதி, பச்சையாறு, பரம்பிக்குளம், வைகை, பெண்ணாறு, சரஸ்வதி, சாவித்ரி, ஷராவதி, தாமிரபரணி, தபதி, துங்கா, வீணா ஆகிய மேற்குத் தொடர்ச்சி மலை ஆறுகள் மூலம் தான் சமநிலப்பகுதிகளில் நீர்பாய்ந்து அம்மக்களை விவசாயத்தில் நாட்டம் கொள்ள வைக்கிறது."
"இதை மாற்ற மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப்பகுதிகளும் சரிவுகளிலும் உயரமாக மரங்களை வெட்டி அந்த இடத்தில் வேறு விவசாயத்திற்கு (தேயிலை தோட்டங்கள்) மாற்றினால் இயற்கையாகவே பருவமழை பொய்து போய்விடும். இத்தனை நாள் இம்மக்களின் பட்டறிவில் அறிந்து வைத்திருந்த மழை பொழியும் காலக்கணக்கு தவறிவிடும். கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் விவசாயத்தை விட்டு வெளியேறி விடுவார்கள்."
"அவர்களை நகரத்தில் மொத்தமாக அடைத்து வைத்து அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்க வைத்தால் குறிப்பிட்ட இடத்திற்குள்ளாகவே அதிகப்படியான மக்களை அடைக்க முடியும். அது பிராய்லர் கோழிகளை வரிசையாக அடுக்கப்பட்ட கூடுகளில் அடைத்து வளர்ப்பது போல் கட்டுபாட்டுக்குள் வைக்க முடியும். கோழிகளுக்கு தீவனம் போடுவது போல் இந்த மனிதர்களுக்கும் தீவனம் போட வேண்டும் அல்லவா?"
"அப்போது நாம் இவர்கள் வெளியேறிய விவசாய நிலங்களை corporate பெயரில் மொத்தமாக வாங்குவோம். அப்போது நமது விவசாய நீர் தேவைக்கு கைப்பாவை அரசுகளை வைத்து மீண்டும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் சோலைக் காடுகளை வளர்க்கும் திட்டத்தை செயல்படுத்துவோம். அதன் மூலம் corporate விவசாயத்திற்கு நீர் இருக்கும்."
"அப்போது மக்கள் அனைவரும் நகரங்களில் குடியேறி இருப்பார்கள். நிலங்கள் அனைத்தும் corporate க்கு சொந்தமாக இருக்கும். அந்த இடங்களில் உணவு பொருட்களை உற்பத்தி செய்து நகர கட்டிட குடியிருப்புகளில் வளரும் மனித பிராணிகளுக்கு நாம் feed கொடுக்க முடியும். அவர்கள் அந்த நகர அமைப்பை விட்டு வெளி செல்லவதை கவனிக்க தான் சுங்கசாவடி என்ற அமைப்பை நாம் நிறுவ உள்ளோம் என்பதை உணராதவர்கள் தான் அவர்கள்."
"சுங்க சாவடி toll gate என்பது வருங்கால நகரங்களின் நுழைவு வாயில். அதன் வழியாக மட்டுமே ஒவ்வொருவரும் வெளியே உள்ளே செல்ல முடியும். அது பின் நாட்களில் ராணுவ கட்டுபாட்டில் தான் இயங்கும். வெளியே செல்ல அரசாங்க permit வேண்டும் என்பதையெல்லாம் யோசிக்கும் அளவுக்கு அந்த மனிதபிராணிகளுக்கு மூளை இல்லை."
"நகர குடியிருப்புகளில் பூங்கா அமைத்து கொடுத்து விட்டாலே போதும். அதில் செயற்கை புல்லின் மீது அமர்ந்துவிட்டு இயற்கையுடன் கலந்த கற்பனையின் மூழ்கும் பிராணிகள் தான் இவைகள். இவைகளுக்கு பூங்காகளே மனித சரணாலயம்."
"நகரங்களில் யோகா சாமியார்களின் சத்சங்கங்களை ஏற்பாடு செய்து கொடுத்தாலே போதும் இறையுடன் கலந்துவிட்ட கற்பனை உலகில் மிதக்கவிடலாம் இவைகளை."
"ஆணுக்கு சமம் ஆணுக்கு சமம் என பரப்புரை செய்து ஆண்களை உயர்ந்தவர்களாக காட்டி பெண்ணையும் ஆணை போல மாற்றி வேலை செய்ய வைக்க முடியும். மாதத்தின் மூன்று நாட்களில் கூட ஓய்வு எடுக்காமல் கரை வெளியே தெரியாது என துணியை வைத்து அடைத்து கொண்டு feminism பேசி வேலையை செய்யும் முட்டாள் கூட்டம் தான் இந்த பெண் உயிர்கள்."
"வயல்வெளிகளில் பெண்களும் தான் வேலை பார்த்தார்கள், அதுவும் வேலை தான் என்பதையும் உணராமல் இப்போது தான் ஏதோ வேலைக்கு பெண்கள் செல்வது போல பெருமைப்பட்டு கொண்டு corporate கம்பெணிகளின் குறைந்த கூலிக்கு அதிக நேரம் வேலை செய்யும் பெண்களாக இவர்களை மாற்ற முடியும்."
"ஏனெனில், இவர்கள் குழந்தைகளையே நாம் கொடுக்கும் விந்துகளில் தான் பெற்று கொள்வார்கள். அதற்காக தான் ஊர் ஊருக்கு fertility centre ஐ திறக்க இருக்கிறோம். அங்கே சென்று எந்த position ல் உறவு வைத்தால் குழந்தை பிறக்கும் என படங்களை பார்த்து அறிவுரை கேட்டு வைத்து வீட்டில் experiment செய்து பார்க்கும் வேடிக்கை கூட்டமே தான் இது."
"மொத்ததில் இவர்களை நிலத்தில் இருந்து அப்புறப்படுத்தி நகரங்களில் அடைத்து இவர்களை பிராய்லர் கோழிகளை போலவே வளர்த்து நமது கட்டுபாட்டுக்குள் வைக்கலாம்."
"இதை எதிர்த்து பின் நாட்களில் யாராவது கேள்வி கேட்டால், காவிரிபூம்பட்டினத்திலேயே 10 அடிக்குமாடி குடியிருப்பு இருந்ததாக சிலப்பதிகாரம் கூறுவதை சுட்டிகாட்டுவோம்."
"அகத்தியரும் மகாபாரதத்தில் வரும் பலரும் test tube baby என புராணங்களை கட்டுவோம்."
"களவியை படங்களை பார்த்தா கற்று கொள்வது என கேட்டால், கோவில்களிலேயே நம் முன்னோர்கள் அதற்காக தான் செதுக்கி வைத்து அனைவருக்கும் சொல்லி கொடுத்தார்கள் என பெருமை போதை ஏற்றுவோம்."
"அறுவை சிகிச்சை தவறு இயற்கை மருத்துவம் சரி என்றால், சமணத்துறவிகள் தான் முதல் அறுவை சிகிச்சை செய்த செய்திகளை காட்டுவோம். முட்டாள் கூட்டம்! ஏதோ தனது பாட்டன் தான் சமணத்துறவி என நம்பி கடந்து செல்லும்."
"இவர்களுக்கு என்ன தெரியவா போகிறது? இதை அத்தனையையும் ஆதியில் செய்த அதே கூட்டம் தான் இப்போதும் இதை செய்ய வைக்கிறது என.."
"இருந்தாலும், இந்த எழுச்சி பெரும் பழங்குடிகளிடம் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். காலகேயர்களின் வாரிசுகள் அவர்கள்!"
தொடரும்..