04 Feb


காடு என்பது ஒரு உடல், ஓர் உயிர். காடு என்பது பல்வேறு உயிரினங்களை கொண்ட இடம் அல்ல, அது ஓர் உயிரினம். அந்த உயிரினத்திற்கென்று சிந்தனை உண்டு, உணர்வுகள் உண்டு, வடிவமைப்புகள் உண்டு, தேவைகள் உண்டு.

ஓங்கி உயர்ந்த ஆலமரத்தின் பொந்துக்குள் வாழும் எறும்புகள், ஆல மரத்தின் முழுமையை அறிவதில்லை. காடு என்பது ஒரு உயிர்தான் என்ற கருத்தும் இதைப்போல தான். காடுகளில் உள்ள ஓடைகளையும் பறவைகளையும் மரங்களையும் வேடிக்கையாக பார்க்கும் மனிதர்களுக்கு காட்டின் முழுமை புரியாது.

இங்கே எல்லாமே ஒன்றுக்குள் ஒன்றாக தான் இருக்கிறது. நீங்கள் ஓர் உடல் ஒரு உயிர் என்று நினைத்தால் அது முழுமை அல்ல. நீங்கள் உண்ணும் உணவையும் காற்றையும் தன்னுடையதாக்க பல கோடி நுண்ணுயிர்கள் உள்ளே வாழ்ந்து கொண்டு இருக்கிறது என்பது தான் உன்மை.

"நான் எனது" என்ற சிந்தனைகள் உயிர்களுக்கு இல்லை. சரியாக சொல்வது என்றால் எல்லா உயிர்களும் கூடி வாழ்வதையே விரும்புகின்றன. கூடி வாழ்வது ஒன்று தான் படைப்பின் இயல்பும் விதியும் ஆகும்.

சிங்கவால் குரங்குகள் மரக்கிளையில் இருக்கும் போது அம்மரங்களின் கீழே மான்க்கூட்டம் மேய்வது வழக்கம். சிங்கவால் குரங்குள் கடித்துவிட்டு வீசும் துளிர்களை மான்கள் உண்ணுகிறது. தொலைவில் வேட்டை விலங்குகள் வருவதை சிங்கவால் குரங்குகள் அறிந்துகொண்டு மான்க்கூட்டத்திற்கு சொல்லும். அவைகள் தங்களை காத்துகொள்ளும். இது தான் கூட்டுவாழ்க்கையின் சிறப்பு.

காடு தனது உடலில் தாவரங்களையும் பறவைகளையும் வேறுபல உயிரினங்களையும் கொண்டுள்ளது. எல்லா உயிர்களுக்குமான தேவைகளை காடு பார்த்துகொள்கிறது.

தனக்குள் வாழும் எந்த உயிரினமும் அளவிலும் ஆற்றலிலும் மிகுந்து விடக்கூடாது, குறைந்தும் விடக்கூடாது என்பதில் காடு தெளிவாக உள்ளது. மனிதர்களும் காடுகளின் ஒரு அங்கம் தான்.

காடுகளுக்கும் மனிதர்களுக்குமான உறவை நவீனச் சிந்தனைப்போக்கு அறுத்தெறிந்துவிட்டது. "காட்டிலிருந்து வெளியேறுவது தான் மனிதர்களுக்கான சிறப்பம்சம்'' என்ற கதையை நவீனம் தனது ஆயுதமாக மாற்றிவிட்டது. இந்த குரூரத்தின் விளைவு தான் "மனிதர்களால் இயற்கையை வெல்லமுடியும்" என்ற நம்பிக்கை.

காடுகளின் இயல்புகளை புரிந்து கொள்ளுவது மனிதனின் அடிப்படை கடமை. ஏனெனில் மனிதனும் அதில் ஒரு அங்கமே. இந்த கூட்டு வாழ்க்கையை மனிதர்கள் புரிந்து கொள்ளவில்லை. காடுகளை அழித்துவிட்டு மரங்களை நடவு செய்கிறார்கள். நிச்சயமாக மரங்கள் அடர்ந்த தோப்புகள் காடுகள் அல்ல.

எந்த நிலத்தில் பல்வேறு உயிரினங்கள் வாழ்கிறதோ அந்த நிலத்திற்காக தான் வானம் தனது மழையை அனுப்பும்,

"மரங்கள் இருந்தாலே மழை பெய்துவிடும் என்ற அரைகுறையான புரிதல் மனிதர்களின் நவீனச்சிந்தனையில் உதித்த குப்பை. இந்த குப்பையால் மழையை தருவிக்க முடியாது. இதனால் தான் குளிர்மழை பிரதேசங்களான உதகை கொடைக்கானல் போன்ற இடங்களுமே வறண்டு போய்விட்டன.

- ம. செந்தமிழன் அவர்கள் எழுதிய 'கான்' புத்தகத்திலிருந்து.




The forest consists of a body and a life. The forest is not a place where variety of organisms lives, instead forest itself is a living organism. It has thoughts, feelings, designs and needs.

The ants living in the high banyan tree are not aware of the whole tree. Same goes for the forest. Humans, who seeing the streams, birds, trees etc in the forests as fun, could not understand the forest completely.

Here everything is bound to one another. If you think that a body is a life, hence it is not a complete understanding. The truth is, millions of microorganisms are living in the food we eat and the air we inhale.

Living organisms will not have the thoughts like"me, mine", which is also means selfish. To put it more clearly, all living organisms prefer to live together. It is the nature and rule of creation.

It is normal that when the lion-tailed macaques are on the trees, a herd of deers would be grazing on the ground. The deers will eat the shoots that lion-tailed macaques bite from the tree and thrown to them. When there is any predators coming, these lion-tailed macaques will notice it and alert the herd of deers. The deers will protect themselves from the predators. This is the specialty of live together.

The forest contains plants, birds, and many other living organisms in its' body. The forest has all the needs to care for its' lives.

The forest is always aware of its' living organisms by making sure none of them are exceed or fall short of the required limit in term of the size and ability. Humans are also part of the forest.

Modern thinking has ruined the relationship between the forests and humans. The modern world has spread and popularize the phrase, "coming out of the forest and the life there is the specialty for humans" to bring the tribal people out of their home. This thought got even more worse then and they started to believe that "they can overpower the nature."

Understanding the nature of the forest is the basic duty of every human being. Because we are also a part of it. They're destroying the forests and planting trees without understanding the idea of collective life. These planted trees won't make a forest, it's just a dense groves.

The sky would send its' rain just for the land in which various organisms live in it.

The incomplete understanding, "rains can fall if you just have trees" is an example of how worse people's modern thinking is. This kind of thought or ideas won't bring rain. That's why some of the cold areas are now dry.

- From the book 'Kaan' written by M. Senthamilan.



Comments
* The email will not be published on the website.
I BUILT MY SITE FOR FREE USING