10 May


தண்ணீரைத் தன்னுள் தேக்கி அந்நீரை ஆவியாகவிடாமல் எப்போதும் குளிர்ச்சியாய் வைப்பது "களிமண்ணின்' பண்பாகும். களிமண்ணை நன்கு சலித்து அதிலிருக்கும் மணலைப் பிரித்தெடுத்து அதில் தண்ணீர் ஊற்றிக் குழப்பி சேராக்கி உடல் முழுவதும் பூசிக்கொள்ளும் வழக்கம் பழங்குடிகளிடையே தொன்றுதொட்டு இருந்து வந்திருக்கிறது. இதனை "மண்குளியல்" என்பார்கள். வளர் இளமைப் பருவத்தைக் கடந்தவர்கள், தோல்நோய் உள்ளவர்கள் மற்றும் உடல்வெப்பு நோய் உள்ளவர்களுக்கு இக்களிமண் குளியல் இன்றியமையாததாகும். ஆனால் அதே களிமண்ணை இன்றைக்கு நவீனமுறையில் டப்பாக்களில் அடைத்து "Lacto Calamine" என்ற பெயரில் வணிகம் செய்கிறார்கள்.

எடுத்துகாட்டு :  
மண் = Mine
களிமண் = Calamine
களி = Clay

இன்றைக்கு புழக்கத்தில் இருக்கும் ஊசி மருந்துகள் (Injections) கூட முற்காலத்தில் மூலிகைகளைக் காய்ச்சி வடிக்கும் முறையிலிருந்தே தோன்றியிருக்கக்கூடும். இல்லற வாழ்க்கையையும், உலக வாழ்க்கையையும் துறந்து தன்னை சித்தன் எனச்சொல்லிக் கொள்ளும் ஒருவனுக்கு எவ்வித தேவையும் இருந்திருக்க வாய்ப்பில்லை. தேவையே இல்லாத ஒருவன் கண்டுபிடிப்புகளை எவ்வாறு நிகழ்த்துவான்? காலங்காலமாய் ஒரே மண்ணில் தற்சார்பாய் வாழ்ந்துவந்த பழங்குடிகளுக்கு மட்டுமே, மண்ணின் மீதான இத்தகைய மரபறிவு வந்திருக்க வேண்டும். அது ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னால் வாழ்ந்துவந்த அவர்தம் முன்னோர்களின் வழியே படிப்படியாய் ஆராயப்பட்டு, மேம்படுத்தபட்டு பின்னாட்களில் ஒரு பேரறிவுப் பெட்டகமாய் அவர்களுக்கு கிடைத்திருக்க வேண்டும்.

ஆவணப்படுத்தப்படாத இத்தகைய மரபறிவை ஆவணப்படுத்தியவர்களே சித்தர்கள் என்றழைக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பாண்மையானோர் பழங்குடிகளின் மரபறிவை திருடவந்த போலிகளாவர். வணிகமே இப்போலிகளை பின்னால் இருந்து இயக்கியது. இத்திட்டத்தின் படி சித்தர்கள் என்ற பெயரில் மெல்ல மெல்ல ஊருக்குள் புகுந்து பழங்குடிகளின் மரபறிவைத் திருடுவது, பின் அவற்றை ஆவணப்படுத்துவது. ஒன்றுக்கும் பயன்படாத வெற்றுத் தத்துவங்களையும், புதிய புதிய கொள்கைகளையும் மதத்தின் பேரால் போதித்து அவர்களைக் கெடுத்துக் குழப்புவது, சிலை வழிபாட்டை புகுத்தியது போன்ற செயல்களை அவர்கள் செய்திருக்கின்றனர்.

தேசிய இன பழங்குடிகளிடமிருந்து திருடப்பட்ட மரபறிவுகளும், வழிபாடுகளுமே இன்றைக்கு நவீன அறிவியலாய் மாறி அதே பழங்குடிகளை வீழ்த்தியிருக்கிறது. வணிகமே இதை முன்னின்று நடத்திக் காட்டியிருக்கிறது.



Clay can store water and keep it cool without being evaporated. Traditionally, tribal people have the practice of applying mud, which is the mixture of filtered clay and water, on their body. We call it as "mud bath". It is essential for those in teenage years, people with skin disease, people with heat-related illness. But today, they are doing business using this same clay in the name of "Lacto Calamine".

For example :
Mann = Mine
Kalimann = Calamine
Kali = Clay

The modern day injections also should have originated from the old method of distilling the herbs. Those who have renounced their family life and material world, and called themselves as siddhar would not have had any needs. How could someone who is living without any needs, can make new discoveries? Only the aboriginal people who lived a self sustainable life in one land for such a long time should have gained all those genetic knowledge. Our ancestors should have got this great wisdom from their forefathers thousands of years ago who have gradually examined and improved the knowledge.

Siddhars are those who have documented these genetic knowledge. Most of them are fakes who came to steal the knowledge from aboriginal people. Trade is what direct them from behind. Their aim is to entering the rural side where people are living in the name of Siddhars to steal the people's knowledge, documenting them, preaching all the useless ideologies and new principles in the name of religion to spoil and confuse the people, and lastly introducing the idol worship.

All the genetic knowledge and worship practices stolen from every aboriginal community is now transformed into modern science, which have defeated the people in return. Influence of trade played a major in all these actions.






Comments
* The email will not be published on the website.
I BUILT MY SITE FOR FREE USING