நாம் குலதெய்வங்கள் என வணங்குவது முன்னோர் நினைவலைகளை தான் என கடந்த 2 வருடமாக பலவிதங்களில் பேசியும் எழுதியும் வருகிறோம்.
ஆனால் அப்போது பலரும் அதை கேலி செய்தார்கள். இப்போது அது போன்ற நினைவலைகளை கெட்ட நினைவலைகள் என ஊடகம் மூலம் பரப்புரை நடக்கிறது.
அதில் முக்கியமான படம் 2.0
குலதெய்வம் என்பது நம்முடைய முன்னோர்கள் சாகும் நேரத்தில் எதை நினைத்து இறக்கிறார்களோ, அதன் அடிப்படையில் தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என பழைய பதிவுகளில் பார்த்தோம்.
அதாவது, ஒருவர் ஒரு ஊரை காக்க போரிட்டு மரணம் அடைந்தால் அவர்களின் கடைசி கட்ட நினைவலை வீரியமாகவும், unconscious நிலையில் கடைசியாக யோசித்த விசயமே திரும்ப திரும்ப வரும். அதாவது அவரது ஊரை காக்க வேண்டி மட்டுமே இருக்கும்.
அதை தான் நாம் கருப்பசாமி என சொல்கிறோம். ஒவ்வொரு ஊரிலும் ஒரு கருப்புசாமி இருக்கும் அது ஒரே ஆள் அல்ல. அந்த அந்த பகுதியில் இருக்கும் வேறு பல ஆட்கள்!
நாம் உண்மையில் நினைவலைகளை தான் வணங்குகிறோமா என அறிந்து கொள்ள வேண்டும் எனில், எந்த தெய்வத்திற்கெல்லாம் பலி கொடுக்கிறார்களோ அதுவே செயல்படும் நினைவலை.
இந்த நினைவலைகளை நாம் நல்ல முறையில் பயண்படுத்திவருகிறோம்.
இந்த நினைவலைகளின் தாக்கம் இந்த இனத்தில் எப்போதும் இருக்கும் அதை வெளியேற்ற தான் பல நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
வடநாட்டு சேட்டு கும்பல் நம்மை பலி கொடுக்கவிடாமல் தடுப்பதும் இதற்காக தான்!
ஆனால் இந்த படத்தில் சொல்லும் ஆராவுக்கும் நினைவலைகளுக்கும் 50% தான் தொடர்புள்ளது. மேலும் நினைவலைகள் எல்லாமே Negative Energy என்று இவர்கள் திட்டமிட்டு பரப்புரை செய்கிறார்கள்!
உண்மை தான் இது negative energy தான் ஆனால் யாருக்கு negative யாருக்கு positive என்பது அனுகுபவரை பொருத்தது.
Positive Energy-ஐ அதை நோக்கி அனுப்பினால் அது செயல் இழந்துவிடுமாம்.
இது வேறு ஒன்றும் அல்ல. குலதெய்வத்தை கட்டும் அதே தொழில்நுட்பம் தான். அதாவது பூப்புகுறுதி, செப்பு தகடு போன்ற சூரியனின் தன்மையை கொண்ட பொருள்களை வைத்து கட்டுவது தான்!
ஒரு பக்கம் இதை கெட்ட சக்தியாக சித்தரிக்க முயற்சி நடந்தாலும், நாம் ஒரு பக்கம் இதை மீட்க போராடுகிறோம்.
அவர்கள் உயரிய தொழில்நுட்பம் மூலம் நினைவலைகளை கட்ட முயற்சி செய்கிறார்கள் என்பது நாம் முன்னமே பார்த்தது தான்.
நாமும் முன்னோர் நினைவலை வழிபாட்டை (குலதெய்வ வழிபாட்டை) மீட்க முயற்சி செய்வோம்!
நாம் இந்த சண்டை தோற்று போனாலும் இந்த தகவலையாகிலும் அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டிய தேவை நம்மிடம் இருக்கிறது.
உங்களால் முடிந்தவரை குடுமபத்தாருக்கு, நண்பர்களுக்கு, WhatsApp குழுக்களில் பரப்புங்கள். கேலி செய்தாலும் பரவாயில்லை.
தகவலை மூளையில் சேர்த்துவிட்ட திருப்தி கிடைக்கும்!